”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
பாலிவுட் நடிகர்களுடன் தமிழ் நடிகர்களை ஒப்பிட்டு நடிகை ஜோதிகா பேசியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அவர் கொடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் தான் ரசிகர்களின் ஃபேவரட். ஆறே ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய ஜோதிகா திருமணத்துக்கு பிறகு ஒரு பிரேக் எடுத்து கொண்டார். பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஷைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படம் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
வுமன் சென்ரிக் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் பல வேரியேஷன் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் உடன் நடித்த 'ஷைத்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடித்த ஸ்ரீகாந்த் படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தாலும் இந்தி ரசிகர்கள் ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை ஜோதிகா பாலிவுட் நடிகர்களுடன் தமிழ் நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் மாதம் அஜய் தேவ்கன் உடன் அவர் இணைந்து நடித்த சைத்தான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜோதிகா. " அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் " என ஜோதிகா பேசியுள்ளார்.