Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்
அட என்னப்பா மாதம்பட்டி இப்படி பண்றியே என ஃபேன்ஸ் நொச் கொட்டும் வகையில்..நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஷில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மெஹந்தி சர்கஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். நடிகராக பிரபல சமையல் நிபுணராகவும் மக்கள் மத்தியில் பரிட்சயமானவர். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவரது குடும்ப வாழ்க்கை தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஷில்டாவுடன் காதல் வாழ்க்கையில் உள்ளதாக ரகசிய தகவல் கசிந்தது. அதே சமயம் ஜாயும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரங்கராஜுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். ஜாயும் ஏற்கனவே திருமணமானவர். பொன்மகள் வந்தாள் திரைப்பட இயக்குநர் ஃபெட்ரிக்குடன் திருமணமான நிலையில் இந்த தம்பதி 2023 ஆம் ஆண்டு மணவாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். ஆனால் ரங்கராஜின் மனைவி ஸ்ருதியோ தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதனையடுத்து ரங்கராஜ் ஸ்ருதியை பிரிய போவதாகவும் ஜாயை திருமணம் செய்து கொள்ளப்போவதாகம் கூறப்பட்டது. இந்நிலையில் தான் சில வாரங்களுக்கு முன் ஜாய் கிரிஷில்டா ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
அதுமட்டுமில்லாமல், தான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த செய்திக்கும் ரங்கராஜ் வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். மேலும் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டா பயோவில் வைஃப் ஆஃப் மாதம்பட்டி ரங்கராஜ் என வைத்திருப்பார். அதே போல் ஜாயும் வைஃப் ஆஃப் மாதம்பட்டி ரங்கராஜ் என தனது பயோவை மாற்றினார். என்னடா ஒரே குழப்பமா இருக்கே என ரசிகர்கள் திணறிக் கொண்டிருக்க, சொந்த ஊரில் மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார் மாதம்பட்டி ரெங்கராஜ். இந்த புகைப்படங்கள் வைரலாக ஜாய் ரங்கராஜுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டார்.
எனினும் ஜாய் ரங்கராஜிற்கு முன்னதாகவே திருமணமாகி விஅட்டதாகவும் தற்போது ரங்கராஜுடன் ஏதோ பிரச்சனை ஏற்பட வேண்டுமென்றே ஜாய் புகைப்படங்களை லீக் செய்து மிரட்டுவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 7 மாதம் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையில் தன்னுடன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.