Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

பிரபல யூடியூபரான இர்பான், உதவி செய்ய சென்ற இடத்தில் ஏழை மக்களிடம் அசிங்கமாக இல்லையா என கோபமாக பேசியதற்காக இணையவாசிகள் வருத்தெடுத்த நிலையில் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு தப்பு செய்து மற்றவர்களை காயப்படுத்திய பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதே பொழப்பா போச்சு என்று அதற்கும் இர்பானை திட்டிதீத்து வருகின்றனர்.

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அடுத்து சர்ச்சை மன்னனாக வலம் வரும் இர்பான் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில் சோசியல் மீடியாவில்  நெட்டிசன்கள் இர்பானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விதவிதமான உணவுகளை ருசித்து அதை வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். ரோட்டுக்கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை இவர் ருசிக்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். இப்படி யூடியூப் மூலம் பிரபலமான இவர் அதனை பயன்படுத்திக்கொண்டு சினிமா செலிபிரட்டிகள், அரசியல்வாதிகள் என இண்டெர்வியூ-வும் எடுக்கிறார். 

தன் குடும்பத்தில் எது நடந்தாலும் அதை வீடியோவக எடுத்து வெளியிட்டு வரும் இர்பான் தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார். இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பது சட்டப்படி குற்றம்...ஆனால் இர்பனோ குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கினார். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சட்டப்படி அவர்மீது நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆனார் இர்பான்.  அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கினார் இர்பான். குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து அதையும் வீடியோவாக வெளியிட்டார். இதனால் மருத்துவர்களும் இர்பானை எச்சரித்தனர். மீண்டும் மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆனார்..ஆளும் அரசின் சப்போர்ட் மூலம் இர்பான் எது செய்தாலும் அதில் இருந்து ஈசியாக எஸ்கேப் ஆவதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது ரம்ஜன் தினமான ஏழைகளுக்கு உணவு வழங்கினார் இர்பான்....அப்போது எதிர்பாரா விதமாக ஒருவர் உணவை பறிக்க முயல இதற்கு இர்பான் அசிங்கமாக இல்லையா... இப்படியா வாங்குவீங்க என்று திட்டுகிறார். இந்த வீடியோவையும் யுடியூபில் வெளியிட்டுள்ளார். இர்பானின் இந்த மோசமான செயலால் சமூக வலைதளங்களில் இர்பானை கடுமையாக திட்டி தீர்த்தனர். சோசியல் மீடியாவில் ஒருவர், காருக்கு உள்ள உக்காந்து குடுத்தா கிடைக்குமோ கிடைக்காதோன்னு முண்டியடிச்சி வரத்தான செய்வாங்க…  அதுக்கென்னமோ கொள்ள காரங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பிஜிஎம் அப்புறம் நக்கல்னு… இது ஒரு கன்டென்ட் என்று கடுமையாக இர்பானை விமர்சனம் செய்துள்ளார். இர்பானின் இந்த் திமிர் தனத்தை பார்க்கையில் கடுப்பாக வருகிறது என்றும் கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.

கோபமாக பேசியதற்காக இணையவாசிகள் வருத்தெடுத்த நிலையில் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், அந்த சூழலை தன்னால் கையாள தெரியவில்லை. அதில் திணறியதால் சில விஷயங்களை செய்துவிட்டேன். அது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் அங்கிருந்து வந்தவன் தான் எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான்.அதற்கும் தப்பு செய்து மற்றவர்களை காயப்படுத்திய பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதே பொழப்பா போச்சு என்று அதற்கும் இர்பானை திட்டிதீத்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola