Divyabharathi | ”ஜி.வி-யோட DATING-ஆ?அதுவும் கல்யாணமானவன் கூட” WARNING கொடுத்த திவ்ய பாரதி | GV Prakash

ஜிவி பிரகாஷுடன் நான் டேட்டிங் போனேனா? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சைந்தவி பிரிய நான் காரணம்-னு சொல்றீங்க இதான் என்னோட கடைசி வார்னிங் என திவ்யா பாரதி பதிலடி கொடுத்துள்ளது கோலிவுட் ஹாட்டாப்பிக்காக உள்ளது.

திருமண உறவில் இருந்து வெளிவந்தாலும் ஜி.வி மற்றும் சைந்தவி ஒருத்தர் மீது ஒருத்தர் அளவுகடந்த மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து காண்சர்டில் சேர்ந்து பாடியது ரசிகர்களை  கவர்ந்தது. விவாகரத்திற்கு பின்னும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். 

சமீபத்தில் ஜி.வி சைந்தவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜ்ராகி விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்கள். இந்த வழக்கும் நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. ஜி.வி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதி முன் தெரிவித்தார்கள் . இந்த விசாரணைக்கு இருவரும் ஒரே காரில் வந்து ஒரே காரில் சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஜி.வி யின் தனிப்பட்ட வாழ்க்கையே ஒரு அழகான காதல் படம் போல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இவர்கள் பிரிவுக்கு காரணமாக பல்வேறு வதந்திகள் பரவியது. பேச்சுலர் படத்திற்கு பிறகு திவ்யபாரதியுடன் ஜிவி டேட்டிங் சென்றதாகவும், இவர்கள் காதல் தான் விவாகரத்து காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. பின் ஜி வி திவ்ய பாரதி நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ப்ரொமஷன் நிகழ்ச்சியில் இதுக்கு குறித்து கேள்வி எழுப்பட்டது அதற்கு பதிலளித்த ஜி.வி மற்றும் திவ்ய பாரதி இருவரும் இல்லை என மறுத்தனர். 

ஆனாலும் சமூக வலைதளங்களில் இந்த வதந்தி தொடர்ந்து பரவி வந்த நிலையில் அதற்கு நடிகை திவ்யா பாரதி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகரை ஒருபோதும் டேட் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என கூறியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola