Dhanush : தொடரும் Rolls royce பஞ்சாயத்துகள்... நீதிமன்ற விமர்சனத்தில் இருந்து தப்புவாரா தனுஷ்?

Continues below advertisement

அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி... விஜய்க்கு பதில் தனுஷ்!

சொகுசு கார் வரி விலக்கில் நாளை தீர்ப்பு! நடிகர் தனுஷ், கடந்த 2015ஆம் ஆண்டு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். கருப்பு நிறத்தில் உள்ள இந்த காரின் விலை மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியது தொடர்பாக தனுஷ் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை தனுஷ் வாங்கியுள்ளார். இந்த காரையும் தனுஷ் கருப்பு நிறத்தில் வாங்கியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் தனுஷ் டீம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது வெளியிடப்பட்டன.

விஜய் காரின் அபராதம் வழக்கு விவரம்: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பு விளக்கமளித்திருந்தது. சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஜூலை 28ஆம் தேதி தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு சொகுசு வரி செலுத்த தடைகோரிய விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram