Vijay sethupathi : கொஞ்சமாவது நன்றியோட இருங்க விஜய் சேதுபதி - இடும்பாவனம் கார்த்திக்

Continues below advertisement

தி பேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஈழ தமிழர்களை இழிவு படுத்தியிருப்பதாக கூறி தமிழ் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கொந்தளித்தன.ஆனால் தமிழர்களின் உணர்வுகளை நாங்கள் புண்படுத்தவில்லை. அவர்களின் உணர்வுகளை ஆழமாகத்தான் காட்டியுள்ளோம் என படக்குழுவினர் மறுத்தனர். இந்நிலையில் பேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேற்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தனர், அதன் மூலம் அவர்கள் இயக்க இருக்கும் அடுத்த தொடரில் மக்கள் செல்வன் நடிப்பது உறுதியானது. அப்போது வெளியான புகைப்படம் தீயாக பரவியது. இந்த புதிய சீரிஸில் விஜய் சேதுபதி ஷாகித் கபூருடன் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram