ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன்
மத்திய அரசு கூறியிருக்கும் ஒளிப்பதிவு சட்டம் 2021க்கு எதிராக இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் எல்லாரும் தங்களுடைய கருத்துகளை சமூகவலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை பதிவு செய்தார். தற்போது அமைச்சர் சாமிநாதன் 'ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.