Modi behind congress Ajay rai | பிரதமர் மோடி பின்னடைவு!கெத்து காட்டும் காங்கிரஸ்!அனல்பறக்கும் வாரணாசி

Continues below advertisement

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 6000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது அர்சியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு தான் என்ற எண்ணத்தில் தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெற்றிக்கொண்டாட்டத்தை தொடங்கிய பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய நிலையில், வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சில தொகுதிகள் நமக்கு தான் என தலைவர்கள் மெத்தனத்தில் இருப்பது உண்டு. பெரும்பாலும் அவற்றை அவர்கள் கைப்பற்றுவதும் வழக்கம் தான். அப்படித்தான் மோடிக்கு வாரணாசி. பிரதமரின் தொகுதி கண்டிப்பாக வெற்றி அவருக்கு தான் என அனைவரும் எண்ணி வந்த நிலையில், முதற்கட்ட நிலவரப்படி பிரதமர் மோடி சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அத்தொகுதியில் 2காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஜய் ராய் முன்னிலை வகித்து வருகிறார்.

ஒருவேளை வாரணாசியில் பிரதமர் மோடி தோல்வியை சந்தித்தால் ஒட்டுமொத்த பாஜகவையும் அலறவைக்கும் தேர்தலாகவே இந்த 2024 தேர்தல் பார்க்கப்படும்

கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி என வெளியான நிலையில், தற்போது முன்னிலை நிலவரம் இழுபறியாக நீடித்து வருவது காங்கிரஸுக்கு புதுதெம்பை அளித்துள்ளது, 

பிரதமர் மோடி பின்னடைவு!கெத்து காட்டும் காங்கிரஸ்!அனல்பறக்கும் வாரணாசி

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram