Lok sabha election results 2024 | நெருங்கியது கிளைமாக்ஸ்! மத்தியில் யார் ஆட்சி?

Continues below advertisement

இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவானது  ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை  இன்று எண்ணப்படுகிறது.இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பாக நடைபெறும் வகையில், பலகட்ட பாதுகாப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

7 கட்டமாக நடைபெற்ற தேர்தலில்,  முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவிகித வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவிகித வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவிகித வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவிகித வாக்குகளும் 7-வது கட்ட தேர்தலில் 62.36 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படவுள்ளது. ஆனால் இம்முறை, எண்ணப்பட்ட தபால் வாக்குககளின் முடிவுகள் முதலில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், கடைசி கட்ட மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்குகள் முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைக்காக நடைபெற்று வரும் தேர்தலில் தேசிய அளவில் முக்கியமாக 2 கூட்டணிகள் தலைமையிலான கூட்டணி இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. ABP நிறுவனமும் C voter உடன் இணைந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தது. கருத்து கணிப்புகள் முடிவில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று, உண்மையான தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.  தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தொடருமா அல்லது, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது பெரும்பாலும் இன்று மதியத்திற்குள்ளோ அல்லது இன்று மாலைக்குள்ளோ தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram