”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பங்கேற்றனர். 

 

இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்தில் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது, திமுக ஐடி விங் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை. ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர். மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா? முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்’ என்று பதிவிட்டுள்ளது.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola