Uttar pradesh Akhilesh Yadav | எகிறி அடித்த அகிலேஷ்! திக்குமுக்காடி நிற்கும் மோடி!
உத்தரபிரதேசத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிகமாக தொகுதிகளில் முன்னிலை வகித்து மக்களவை தேர்தலில் பெரிய ட்விஸ்ட் கொடுத்து பாஜகவினரை வியக்க வைத்துள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்று உத்தரபிரதேசம். 80 தொகுதிகள் இருப்பதால், தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் உத்தரபிரதேசத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கக் கூடிய உத்தரபிரதேசத்தில் அவர்களுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்தன.
அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்தன. அதுவும் அயோத்தி ராமர் கோயில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என கூறப்பட்டது. மற்றொரு பக்கம் விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மையை வைத்து பாஜகவை ரவுண்டு கட்டியது காங்கிரஸ்.
பாஜகவின் கோட்டையாக உள்ள உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தலில் மாஸ் காட்டி வருகிறது இந்தியா கூட்டணி. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 35 இடங்களை கைப்பற்றி பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
உத்தரபிரதேசத்தில் வலுவான கூட்டணி அமைத்து பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் சாதித்து காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இரண்டு கூட்டணிக்குள்ளும் இழுபறி நீடிப்பதில் உத்தரபிரதேசத்தின் பங்கு அதிகம் என பேச்சு இருக்கிறது.