Sowmiya Anbumani Leading Dharmapuri | சவுமியா அன்புமணி முன்னிலை..காலரை தூக்கிவிடும் பாமக!
சவுமியா அன்புமணி முன்னிலை..காலரை தூக்கிவிடும் பாமக!
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முதல் சுற்றில் 13000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளார்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள 2024 வேட்பாளர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ல்இருந்து அசோகன் , திராவிட முன்னேற்ற கழகம் ல்இருந்து ஆ. மணி , நாம் தமிழர் கட்சி ல்இருந்து அபிநயா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ல்இருந்து சவுமியா அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்ட நிலையில், சவுமியா அன்புமணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக பார்க்கப்படுகிறது. தற்போது 10 மணி நிலவரப்படி சவுமியா அன்புமணி சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் பாஜக் ஒரு சீட்டு பெற்றாலே அதிசயம் என்ற நிலையில், அசால்ட்டாக பாமக பாஜகவுக்கு ஒரு சீட்டை பெற்றுக்கொடுக்கும் சூழல் அங்கு நிலவி வருகிறது.
இதே நிலை நீடித்தால் சவுமியா அன்புமணி மத்திய அமைச்சராவார். ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிரது
மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முடிவுகளையே முன்னணி நிலவரம் காட்டி வருகிறது. எனவே இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது