BJP Election Results TN : தூக்கி எறியப்பட்ட பாஜக? தமிழ்நாட்டில் மட்டும் ஸ்பெஷல் 234 தொகுதி வாரியான டேட்டா!
இந்தியா முழுவதும் உள்ள 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக முழுவதுமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவி உள்ள நிலையில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 சட்டமன்ற தொகுதிகளில் 1 தொகுதியில் கூட பாஜகவால் வெற்றியை கனியைச் சுவைக்க முடியவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறு சீரமைக்கப்பட்ட பிறகு தற்போது இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தமுள்ள 36 இடங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 11 இடங்களில் பாஜக முழுமையாக துடைத்து எறியப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 39 தொகுதிகளிலும் பாஜகவாலோ அதன் கூட்டணிக் கட்சிகளாலோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. திமுக 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய 3 கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றிவாகை சூடின. மதிமுக ஓர் இடத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் என திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிக் கனியைச் சுவைத்தன.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 221 இடங்களை திமுக கைப்பற்றியது. மற்ற 13 இடங்களில் அதிமுக 8 தொகுதிகளிளும் பாமக 3 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை என்பதே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாஜக கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் எம்.எல்.ஏகள் 4 தொதிகளில் இருந்த போதிலும் 1 ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிப்பெற முடியவில்லை.
இதன் மூலம், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மூலமாக பாஜக 4 இடங்களை வென்றுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி இல்லையென்றால் ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இருக்க மாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறையை விட இந்த முறை அதிமுகவை பல இடங்களில் பின்னுக்கு தள்ளி வாக்கு சதவீதத்தை அதிக படுத்தியுள்ளதாக பாஜக பெருமை பேசி வருகிறது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் வாரியாக பார்க்கும் பொழுது தமிழ்நாட்டை பெறுத்தவரைப் பாஜகவின் தாமரை மலரவில்லை என்பதையே உணர்த்துக்கின்றது.