Annamalai vs Tamilisai | அ.மலையை மாத்துங்க” டெல்லிக்கு ரிப்போர்ட்! பாஜகவில் போர்க்கொடி
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அதிக இடங்களை கைப்பற்றிய திமுகவைவிட, அண்ணாமலையே நோக்கிதான் அதிகபடியான டாக்குகள் வலம் வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக திமுகவை சேர்ந்த தொண்டர்களும் சரி, அதிமுகவை சேர்ந்த பெரிய தலைக்கட்டுகளும் சரி அண்ணாமலையை அடியோ அடி என்று சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பொளக்கின்றன. இது போதாதென்று தற்போது, பாஜகவை சேர்ந்தவர்களே இப்போது அண்ணாமலைக்கு எதிராக ஆப்பு வைக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. அதற்கு காரணம், அண்ணாமலையின் அதிரடியான விமர்சனங்களும், அவசர முடிவுகளும்தான்.
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த கருத்து ஒன்றை அண்ணாமலை அதிரடியாக தெரிவித்திருந்தார். அதற்கு, அதிமுக சார்பில் அறிக்கைகளும், ஆட்சேபனைகளும் வெளியாகி வரும் நிலையில், தன் பங்கிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலைக்கு எதிராக திரும்பிவிட்டார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை, பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என வேலுமணி கருத்து உண்மையே. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது என தெரிவிக்கவே, குறுக்கிட்ட செய்தியாளர் அண்ணாமலை இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என பட்டென்று கேடக அது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து என ஒரே கட்சியை சேர்ந்த அண்ணாமலைக்கு எதிராக பிளேட்டை திருப்பினார். இதன்மூலம், தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை அதிருப்தியில் இருப்பது தெளிவாக தெரிகிறது.
மேலும், தமிழிசையை தவிர பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் அண்ணாமலைக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளிவருகிறது. இதற்கு காரணம், பாஜகவில் சீனியர் நிர்வாகிகள் இருக்கும்போது அண்ணாமலை யாரையும் கண்டுகொள்ளாமல் தானாகவே தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததே என்று கூறப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் சிக்கிய ரூ. 4 கோடி பணம் நயினார் நாகேந்திரன் பணம்தான் என்றும், அதை போலீஸில் போட்டுகொடுத்தது அண்ணாமலைதான் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால், நயினாரும் அண்ணாமலை மீது கோவத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி நாளுக்குநாள் தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை அடுத்தடுத்து பகைத்து கொள்வதால், உட்கட்சி பூசல் ஆரம்பமாகி விட்டது. மேலும் அ.மலையிம் மீது அடுக்கடுகான புகார்களை பாஜக டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விரைவில் அமலை தமிழக பாஜக தலைவர் பதவியுல் இருந்து மாற்றப்படுவார் என அரசியல் விவர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.