15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்

தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினருடன் அவசரமாக ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் விஜய். சட்டம் ஒழுங்கு விவகாரம் விஜயை நெருக்க ஆரம்பித்துள்ள நிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசமடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். பிரச்சாரத்தின் போது விஜயும் சட்டம், ஒழுங்கு விவகாரத்தை கைடில் எடுத்து ஆட்சி மாறினால் காட்சி மாறும் என உறுதி கொடுத்தார். ஆனால் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, மதுரையில் 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளன. தவெக பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முதலமைச்சர் விஜய்க்கு சட்டம், ஒழுங்கு விவகாரம் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவல்துறை, சமூகநலத்துறை, அரசு தலைமை வழக்கறிஞர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதனையடுத்து கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார். கடும் தண்டனை பெற்று தருவது குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிடுவோரை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் விஜய் ரிப்போர்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola