ஓவியத்தின் இரண்டு புறமும் வைக்கப்பட்டிருக்கும் இரு பீட்சாக்களுக்கு இடையில் 3 வித்தியாசங்கள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.
நுகர்வை மட்டுமே மனிதர்களின் புதிய இயல்பாக மாற்றி விட்ட செல்போன், காட்சி ஊடகங்களுக்கு மத்தியில், நம் மூளையைச் சற்றே யோசிக்க வைத்து, வேலை கொடுக்க வேண்டியதும் அவசியமாக மாறிவிட்டது.
இந்த நேரத்தில் 2 ஓவியங்களுக்கு இடையே வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் என நம் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.
இதோ இந்த ஓவியத்தைப் பாருங்கள்.
அண்மையில் வைரலான பீட்சா மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் இது. இதைக் கொண்டு உங்களின் ஐ.க்யூ., கவனிக்கும் திறன், அழுத்தத்தின் கீழ் சிந்திக்கும் திறமை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். 2 ஓவியங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை கண்டுபிடித்தீர்களா?
இதோ 30 விநாடிகள் டைம்..
..
..
..
முடிந்துவிட்டது. என்ன கண்டுபிடித்தீர்களா?
கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். முடியாதவர்கள் கீழே பாருங்கள்..
குடை மிளகாயின் வடிவத்தில், பீட்சா துண்டின் ஓரத்தில், அதன் கைப்பிடி பகுதியில் வேறுபாடுகள் உள்ளன.
Credit: Reddit
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!
- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!
இதையும் வாசிக்கலாம்: Optical Illusion: ஓவியத்தில் மறைந்திருக்கும் பென்சில்; 10 நொடிதான் டைம்- கண்டுபிடிக்க முடியுமா?