Sunset In India: வடக்கே காஷ்மீர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை, இந்தியாவில் சன்செட் பார்ப்பதற்கான சிறந்த இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் சன்செட் பார்ப்பதற்கு ஏற்ற இடங்களின் லிஸ்ட்:
- காஷ்மீரில் உள்ள தால் ஏரி, நாளின் எல்லா நேரங்களிலும் அழகாக காட்சி அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தி மாலையில் சூரியன் மறையும் போது, அந்த இடத்தின் வசீகரம் பல கோணங்களில் மேம்பட்டு கண்களை கவர்கிறது.
- கன்னியாகுமரி கடற்கரை அதன் மூச்சடைப்பை ஏற்படுத்தக் கூடிய சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலமானதாகும். இங்கு கிடைக்கும் இந்த அழகிய காட்சி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் கன்னியாகுமரி பக்கம் ஈர்க்கச் செய்கிறது.
- குஜராத் மாநிலத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் சூரிய அஸ்தமனத்தைக் காண, இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களில் ஒன்றாகும். அந்தி வேளையில் சூரியன் மறையும்போது, அங்குள்ள நிலப்பரப்பு ஆழமான கருஞ்சிவப்பு நிழலாக காட்சியளிக்கும்
- ராதாநகர் கடற்கரை, ஹேவ்லாக் தீவு, அந்தமான் மற்றொரு சிறந்த இடமாகும். அந்தி சாயும் போது அங்கு நிலவும் சூழல் மாயாஜாலமாக தோன்றும்.
இதையும் படியுங்கள்: கோயில் முதல் ஏரி வரை! திருவள்ளூரில் சுற்றிப் பார்க்க இத்தனை இடங்களா? முழு லிஸ்ட்
- ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சூரிய அஸ்தமனத்தின் போது மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு-சிவப்பு வண்ணங்களுடன் பிரமிக்க வைக்கிறது. இதனை காண ஒவ்வொரு ஆண்டும் அங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
- மும்பையின் ஹாஜி அலி ஒரு மறுக்கமுடியாத மத ஸ்தலமாகவும், சூரிய அஸ்தமனத்தைக் காணும் இணையற்ற ஒரு இடமாகவும் திகழ்கிறது.
- கோவாவில் உள்ள பலோலம் கடற்கரை அதன் தனித்துவமான பிறை வடிவத்திற்காக அறியப்படுகிறது. மேலும் இது சூரியன் மறைவதை ரசிக்க இந்தியாவில் உள்ள அழகான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் கோட்டை பகுதியில் சூரியன் மறையும் நேரத்தில், வானம் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தின் ஆழமான நிழலாக மாறி, ஒரு தத்ரூபமான காட்சியைப் போல சுற்றுப்புறத்தை உருவாக்குவதால், அந்தி வேளையில் அழகாகத் தெரிகிறது
- ஷில்லாங்கின் உமியாம் ஏரியின் மீது சூரிய அஸ்தமனத்தின் மயக்கும் காட்சியைக் கண்டு, ஏரிக்கரையில் மகிழ்ச்சியான சுற்றுலாவை அனுபவிக்கலாம்
- வர்கலாவின் பாறைகள் அரபிக்கடலில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
- ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் ஏரியானது சூரிய அஸ்தமனத்திற்கான அமைதியான அமைப்பை வழங்குகிறது. சூரியன் மறையும் போது காட்கள் மற்றும் கோவில்கள் தண்ணீரில் பிரதிபலிக்கின்றன. இது மிகவும் ரம்மியமான சூரிய அஸ்தமனத்தை காணும் வாய்ப்பை வழங்குகின்றன