Worlds Longest Train Journey: 21 நாட்களில் 13 நாடுகளுக்கு பயணிக்கும், உலகின் மிக நீண்ட ரயில் பயணம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்:
பயணம் என்பதும் ஒரு விதமான மருத்துவ சிகிச்சை முறையாகவே கருதப்படுகிறது. மன அழுத்தம், நீண்டகால வேலைப்பளு போன்ற சிரமங்களில் இருந்து விடுபட, பயணங்கள் உதவுகிறது. இது புதிய எண்ணங்கள், புத்துணர்ச்சி போன்ற உடலுக்கு அவசியமாக தேவைப்படும் பல அனுபவங்களை வழங்குகிறது. உள்ளூரிலேயே தொடங்கி வெளிநாடுகள் வரை என பயணங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால், விமான மற்றும் கப்பல் பயணம் அவசியமாகிறது. ஆனால் இப்போது 21 நாட்களில் 13 நாடுகளுக்குச் செல்லும் ஒரு ரயில் வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தைப் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம். இந்த ரயில் பயணம் போர்ச்சுகலில் இருந்து சிங்கப்பூர் வரையிலான தூரத்தை உள்ளடக்கியது.
18,755 கிலோமீட்டர் பயணம்:
உலகின் இந்த மிக நீண்ட ரயில் பயணத்தில் 11 நாடுகள் வழியாக நீங்கள் பயணிப்பீர்கள். உங்களது இந்த பயணம் 21 நாட்கள் இருக்கும். போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரையிலான இந்த 11 நாட்கள் பயணத்தில் 18 ஆயிரத்து 755 கிலோமீட்டர் தூரத்தை நீங்கள் கடந்து செல்வீர்கள். இந்த காலகட்டத்தில், 11 முக்கிய நிறுத்தங்களுடன் பல இடங்களில் இரவு தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு நாட்டின் மற்றும் அந்த இடத்தின் கலாச்சாரம் மற்றும் அழகான காட்சிகளை அனுபவிக்க முடியும். குளிர்காலத்தில் வானிலை மோசமாக இருந்தால் இந்த பயணம் சிறிது கூடுதல் காலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கடக்கும் 11 நாடுகள்:
- லிஸ்பன், போர்ச்சுகல்
- பாரிஸ், ஃப்ரான்ஸ்
- மாஸ்கோ, ரஷ்யா
- பீஜிங், சீனா
- வியண்டியானே, லாவோஸ்
- பேங்காக், தாய்லாந்து
- பதங் பேசர், மலேசியா
- சிங்கப்பூர்
இந்த ரயில் பயணத்தின் போது 3 சிறிய நாடுகளை நீங்கள் கடந்து வரலம். இதற்காக நீங்கள் 7 வித்தியாசமான விசாக்களை பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வேறொரு நாட்டிற்கான இணைப்பு ரயில் நீங்கள் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அற்புத பயணத்திற்கு எவ்வளவு செலவாகும்?
இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் 13 நாடுகளுக்குச் செல்லும்போது எவ்வளவு பணம் செலவாகும்? நீங்கள் 13 நாடுகளுக்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், பட்ஜெட் பிரச்னை எழுவது வழக்கமே. ஆனால், வெறும் 1,350 அமெரிக்க டாலர்களில் (தோராயமாக ரூ.1,13,988) இந்தப் பயணத்தை முடிக்க முடியும். ஒரு முழு கண்டத்தையும் இவ்வளவு குறைந்த செலவில் பார்வையிடும் வாய்ப்பு உண்மையில் ஒரு ஒப்பந்தத்தை விட குறைவாக இல்லை. இதுமட்டுமின்றி டிக்கெட், உணவு, தங்கும், பானங்களும் இந்தப் பணத்தில் அடங்கும்.