வரும் ஆக்ஸ்ட் 27ஆம் தேதி மதுரையில் நிழல் இல்லா நாள், நாளை நண்பகல் 12:19 மணிக்கு ஏற்படயுள்ளது. இந்த அரிய நிகழ்வை அனைவரும் பார்த்து மகிழலாம். அதுமட்டுமின்றி அந்த நிகழ்வை புகைப்படும் எடுத்து பரிசுகள் வெல்லவும் வாய்ப்பு வழங்குகிறது மதுரை கலிலியோ அறிவியல் மையம். ஆண்டுக்கு இரண்டுமுறை நிகழும் இந்த நிகழ்வை எந்த அச்சமுமின்றி மக்கள் கண்டு மகிழலாம் என்கிறார் அந்த மையத்தின் இயக்குனர் அ.சத்யமாணிக்கம். நிழல் இல்லா நாள் என்றால் என்ன? பார்க்கலாம் வாங்க...!


நிழல் இல்லா நாளா?


பகலில் சூரியன் இல்லா விட்டால் நிழல் இருக்காதுதானே, இதில் என்ன ஆச்சரியம் எனலாம். பகலில் வெயில் வெழுத்துக்கட்டினாலும் அன்று குறிப்பிட்ட நிமிடங்கள் நிழல் விழாது. உங்களின் நிழல் இருசக்கர உங்கள் பாதங்களுக்குள் போய்விடும், வாகனத்தில் செல்வோரின் நிழல் வண்டியின் கீழ்ப்பகுதிக்குள் விழுந்திருக்கும். கொடிக்கம்பம், தனியே நடப்பட்டுள்ள கம்புகளின் நிழல் காணாமலே போயிருக்கும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை இல்லா நேரத்திற்கு முன்பு வைத்துப்பாருங்கள் நிழல் இருக்கும், நிழல் ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பாட்டிலின் நிழல் காணாமல் போயிருக்கும்.


இந்த அற்புத நிகழ்வை வருடத்திற்கு இரண்டு முறை பார்க்கலாம். மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இந்த நிகழ்வு நிகழாது. ஒவ்வொரு ஊருக்கும் தேதியும், நேரமும் மாறுபடும். அப்பபடியானால் எல்லா ஊரிலும் உச்சிப் பொழுது 12 மணி கிடையாதா? ஆம் ஒவ்வொரு ஊருக்கும் உச்சிப்பொழுது மாறுபடும்.




நிழல் இல்லா நாள் அறிவியல் காரணம் என்ன? 


நாம் ஒவ்வொரு நாளில் உச்சிப்பொழுது எது என்று கேட்டால் மதியம் பனிரெண்டு மணி எனச் சொல்வோம். அதாவது நமது தலை உச்சிக்கு நேராக சூரியன் இருக்கும் என நினைப்போம், ஆனால் எல்லா நாளும் சூரியன் நேர் உச்சிக்கு வருவதில்லை. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் 23.5 ப்வாக சுற்றுவதை நாம் அறிவோம். இதுவே இதற்கு காரணம். பருவநிலை சாய்வாக மாற்றங்களுக்கும் இதுவே காரணம்.


நாம் சூரிய உதயத்தை தினமும் கவனித்து வந்தால் பார்ப்பதற்கு சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிப்பதிலை என்பதை அறியலாம். சில காலம் வடக்கு நோக்கி நகர்வதைப் போன்றும், சில காலம் தெற்கு நோக்கி நகர்வதைப் போன்றும் இருக்கும். அதாவது சூரியன் வடக்கு நோக்கிப் பயணிப்பதை உத்ராயன் (வடதிசைப் பயணம்) என்றும், தெற்கு நோக்கி பயணிப்பதை தசஷிணாயன் திசைப்பயணம்) என்றும் சொல்லப்படுகிறது. வட (தென் வடக்கு நோக்கி பயணிப்பதன் உச்சம் ஜீன் 21 அன்று முடிகிறது, அந்த காலம் கோடைகாலமாகும். அந்த நாளில் நிழலின் நீளமும் அதிகமாக இருக்கும். தெற்கு நோக்கிய பயணத்தின் உச்சம் டிசம்பர் 21 அன்று முடிகிறது, இது குளிர்காலமாக இருக்கும் அந்த நாளில் நிழலின் நீளமும் அதிகமாக இருக்கும். நீங்கள் கடகரேகைக்கும், மகரரேகைக்கும் இடையில் வாழ்பவராக இருந்தால் சூரியன் நண்பகலில் வடதிசைப்பயணத்தில் ஒரு நாளும் தென்திசைப் பயணத்தில் ஒரு நாளும் உங்கள் உச்சந்தலைக்கு மேலே சரியாகச் செல்லும். இந்த இரண்டு நாட்களில் நிழல் இல்லா நேரத்தை காண முடியும். இதை ஆங்கிலத்தில் Zero Shadow Day (ZSD) என்பார்கள்.




நாம் ஏன் இதை காண வேண்டும்?


இந்த நிழல் இல்லா நாளைப் பயண்படுத்தி பூமியின் கற்றளவைக் காண முடியும். குழந்தைகள், மாணவர்களிடம் வானியல் குறித்த அறிவை, ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இந்த ஆய்வுக்கு பெரிய ஆய்வுக்கூடங்கள் தேவையில்லை. ஒரு சிறு கம்பியை அல்லது ஒரு பென்சிலை நிழல் விழும் இடத்தில் வைத்து இரண்டு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் அளவை குறித்து வந்தால் மாற்றங்களை காண முடியும். இதற்கு தினமும் ஒரு மணி நேரம் செல்விட்டாலே போதும். காலை 11:30 முதல் 12:30 வரை நிழலின் அளவை குறித்துவந்தாலே போதுமானது. இதற்கென தனியாக உள்ள Zero Shadow Day (ZSD) என்ற செயலியைப் பயன்படுத்தி உங்கள் பகுதியில் நிழல் இல்லா நாளை, நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.


மதுரையில் நிழல் இல்லாத நாள் ஆக்ஸ்ட் - 27!


இந்த நேரத்தில் மதுரையில் உள்ளவர்கள் நிழல் இல்லா புகைப்படங்களை, சிறு வீடியோக்களை (வீடியோ என்றால் ஒரு நிமிடத்திற்குள் ) எடுத்து 9842595536 என்ற வாட்ச்அப் எண்ணிற்கு அனுப்பலாம் அல்லது maiyammdu@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். அனுப்பும் அனைவருக்கும் கலிலியோ அறிவியல் மையம் பரிசுகளை அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளது என கலிலியோ அறிவியல் மையம் இயக்குனர் அ.சத்யமாணிக்கம்  தெரிவித்துள்ளார்.