வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களின் முன்னோடியாக அறியப்படும் YOUTUBE நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றை தனது மொபைல் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்கள் யூடியூப் பக்கங்களில் யாரேனும் ஒருவர் பதிவிடும் கருத்துக்களை தங்கள் தாய்மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வசதிகளை  யூடியூப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து ட்விட்டர் வாயிலாக அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஆதில்  100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்ப்பினை இதற்காக உருவாக்கியுள்ளதாகஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இதில் இந்திய மொழிகளும் அடங்கும். உலகம் முழுவது இருக்கக்கூடய யூடியூப் பயனாளர்கள் ஒருவரின் கருத்தை மற்றவர்கள் அறிந்துக்கொள்ளவும் அதற்கு ஏற்ற மாதிரியாக செயல்படவும் இந்த புதிய வசதி உதவியாக இருக்கும் என யூடியூப் நம்பிக்கை தெரிவிக்கிறது.






 


அதன்படி இந்த டிரான்ஸ்லேஷன் வசதியானது ஒவ்வொரு கமெண்டிற்கு கீழே ஒரு பட்டன் வசதியுடன் கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் பயனாளார்களுக்கு இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற வசதிகள் ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில செயலிகளில் முன்னதாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக வாட்சப் நிறுவனமும் இதே போன்றதொரு வசதியை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.






குரல் வழியாக உங்கள் மெசேஜ்களை டைப் செய்ய வைத்து அனுப்பலாம். இந்த வசதி ஆண்ட்ராய்ட், ஐஃபோன் ஆகிய இரண்டிலுமே உள்ளது. இதற்காக சில செட்டிங்குகளை மாற்றம் செய்துவிட்டால், வாட்சாப் மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பிக் கொள்ள முடியும். உங்கள் கையில் ஃபோன் இல்லாமல், எட்டும் தொலைவிலிருக்கும் போது, உங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐஃபோன் மூலமாக நீங்கள் வாட்சாப் மெசேஜ்களை அனுப்பலாம். உங்கள் வாட்சாப் இன்பாக்ஸுக்கு வரும் மெசேஜ்களை வாய்ஸ் அசிஸ்டண்ட் செயலிகளின் உதவியுடன் படிக்கவும் வைக்க முடியும். எனினும், இவற்றிற்கு சில அனுமதிகளை நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும். இந்த வசதியை பயன்படுத்தும்  பயனாளர்கள் வாட்சப் செயலி மிகச் சமீபத்திய வெர்சனாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல கூகுள் அசிஸ்டண்ட் செயலியும் லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.