பிரபல பட்ஜெட் நிறுவனமான ஜியோமி கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் Xiaomi Watch Color 2 என்ற தனது புதிய ஸ்மார்ட் வாட்சினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வாட்சானது சியோமி வாட்சின் முந்தைய பதிப்புகளை போலவே வட்ட வடிவத்திலான திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. Weibo இணையதளத்தில் தற்போது Xiaomi நிறுவனம் Xiaomi Watch Color 2 குறித்த புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் , பல முகப்பு திரை வடிவங்களுடன் அறிமுகமாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்சுடன் இணைந்து Xiaomi Civi smartphone மற்றும் Xiaomi TWS 3 Pro இயர்பட் ஆகியவையும் அறிமுகமாகவுள்ளது. வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி சீனாவில் முதற்கட்டமாக அறிமுகமாகவுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் Xiaomi Watch Color 2 அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Xiaomi Watch Color 2 ஆனது இரண்டு விதமான வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட display faces வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 117 விளையாட்டு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே இது விளையாட்டிக் நாட்டம் உள்ள பயனாளர்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது தவிர 7 வகையான நிறங்களில் வாட்ச் ஸ்ட்ரைப்பை உருவாக்கியுள்ளதாம் .தற்போது இது குறித்த முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை. என்றாலும் பயனாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சியோமி கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் வாட்ச்சில் இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்க பகுப்பாய்வு உள்ளிட்ட அம்சங்களை புகுத்தி முதன் முதலாக சைனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு 9,100 ரூயாய் என்ற இந்திய மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் , இந்தியாவில் அதன் விலை 10,999 ரூபாயாக இருந்தது.
அதே போல Xiaomi Watch Color 2 ஆனது இந்தியாவில் விற்பனைக்கு வரும் பொழுது, சீனாவை விட அதிகமாக விற்பனையாகலாம். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi Watch Color ஆனது 1.39 இன்ச் AMOLED திரை வசதியுடன் , 14 நாட்கள் பேட்டரி வசதியுடன் அறிமுகமானது.மேலும் Bluetooth 5.0 வசதி ,NFC வசதி மற்றும் 5ATM அளவிலான வாட்டர் ரெசிஸ்டன்ஸியுடன் வெளியானது.ஜிபிஸ் வசதி, இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதி போன்ற பல வசதிகள் புகுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த புதிய மாடல் Xiaomi Watch Color 2 முந்தைய பதிப்பை விட சற்று மேம்படுத்தப்பட்ட வசதியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.