சியோமி நிறுவனம் தன்னுடைய முதல் மடக்கக்கூடிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் போல்ட் (Xiaomi Mi Mix Fold) என்ற பெயரில் இந்த போன் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் ஏப்ரல் 16ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் மூன்று வேரிஎண்ட்களில் வெளியாகவுள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் போல்ட் 12/256 GB வேரியண்ட் இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும். சியோமி எம்ஐ மிக்ஸ் போல்ட் 12/512GB வேரியன்ட் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் இறுதியாக 16/512 GB வேரியண்ட் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படவுள்ளது.   




ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 OS தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டிக்கு என்று தனி ஸ்லாட் இல்லாத நிலையில் இன்டெர்னல் மெமரியாக 256 மற்றும் 512 GB வேரியன்ட் வகைகளில் வெளியாகவுள்ளது. முறையே 108, 8 மற்றும் 13 மெகாபிக்செல் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு கொண்டதாகவும், 20 மெகாபிக்செல் Selfie கேமரா அமைப்பும் உள்ளது. 


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Kx4kfrD4NwI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


சவுண்ட் குவாலிட்டியை அதிகரிக்கும் வகையில் 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல புதிய ஸ்மார்ட் போன்களை போல 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் இந்த ஸ்மார்ட் போனிலும் இல்லை. Li-Po 5020 mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட் போனை 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 37 நிமிடம் தேவைப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.