கடந்த மாதம் சியோமி MI 11 ULTRA மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போதைய செய்தி என்னவென்றால், அந்த மாடலுக்கு பொருந்தும் வகையிலான 67 W சார்ஜரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது சியோமி.




கடந்த மாதம் சியோமி தன்னுடைய அசத்தல் மாடலாக MI 11 ULTRAவை அறிமுகம் செய்தது. 6.8 இஞ்ச் டிஸ்பிளே, டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 12 ஜிபி ரேம், 256 இண்டர்நல் ஸ்டோரேஜ், 20MP செல்ஃபி கேமரா, 50MP+40MP+40MP என்ற அசத்தலான 3 பின்பக்க கேமராக்கள்,  5,000 mAh பேட்டரி கெபாசிட்டி, ஒன்றரை மீட்டர் வரை ஆழமான நீரில் விழுந்தால் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும் கெபாசிட்டி என வேற லெவலில் சிறப்பம்சங்களை கொடுத்திருந்தது சியோமி.  சிறப்பம்சங்களுகு ஏற்ப விலையும் பிரம்மிக்க வைத்தது. இந்திய சந்தையில் ரூ.69,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 




இந்த செல்போனில் சார்ஜரை பொருத்தவரை 55w சார்ஜர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் MI 11 ULTRA மாடல் 67W சார்ஜிங் கெபாசிட்டி கொண்டது என அறிவிக்கப்பட்டது. அறிவிப்புக்கு ஏற்ப 67W சார்ஜரை சியோமி விரைவில் அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளது. தேவையானவர்கள் சார்ஜரை தனியாக வாங்கிக்கொள்ளலாம் என சியோமி அறிவித்துள்ளது. அதாவது தற்போது செல்போனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் 55w சார்ஜரில் செல்போன் முழுவதும் சார்ஜ் ஆக ஒரு மணி ஆகும். அதுவே அப்டேட் சார்ஜரான 67Wல் செல்போன் முழுவதும் சார்ஜாக 36 நிமிடங்கள் தான் எடுக்கும். 




அதிவேக சார்ஜ் வேண்டும் என விரும்பும் MI 11 ULTRA மாடல் பயனாளர்கள் வரப்போகும் 67W சார்ஜருக்காக காத்திருக்கலாம். செல்போனுடன் ஒரு சார்ஜரை கொடுத்துவிட்டு அதற்கான அதிவேக சார்ஜரை தனியாக விற்பனை செய்வது ஐபோன் டெக்னிக். அதே பாணியை கையில் எடுத்து தற்போது வியாபாரத்தில் இறங்கியுள்ளது சியோமி.