ரூ.20 ஆயிரத்துக்குள் அசர வைக்கும் கேமரா, சார்ஜிங், பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன்  பல போன் மாடல்களை ரெட்மி களமிறக்கியுள்ளது. அந்த வரிசையில் வெளியாகியுள்ளது Redmi Note 10S. முன்பே இந்த மாடல் இந்தியாவில் வெளியாகப்போவதாக தகவல்கள் கசிந்த நிலையில் மே 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த மாடலை சியோமி வெளியிடும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியானது. அதன்படி நேற்று இந்த மாடல் வெளியானது.  Redmi Note 10S மாடல் மட்டுமின்றி ரெட்மி ஸ்மார்ட் வாட்சையும் ரிலீஸ் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வெளியானாலும்  Redmi Note 10S மாடல் போன் கடந்த மார்ச் மாதமே சீனாவில் வெளியானது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்சும் நவம்பரில் வெளியானது.




Redmi Note 10S: விலை மற்றும் சிறப்பம்சங்கள்:



பொதுவாக ரெட்மி பட்ஜெட் பயனாளர்களை குறி வைப்பதால் இந்த மாடலும் பட்ஜெட் போனாகவே வெளியாகியுள்ளது. அதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6GB + 64GB கொண்ட மாடல் ரூ.14,999ஆக விற்பனை செய்யப்படுகிறது. 6GB + 128GB கொண்ட மாடல் ரூ.15,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த மாடல் செல்போன், வரும் 18 ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான், எம் ஐ விற்பனை தளங்களில் செல்போனை பெறலாம். ஆனால் சில இடங்களில் ஊரடங்கு இருப்பதால் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் தெரிகிறது.


சமீபத்தில் வெளியான ரெட்மி மாடல்களைப் போலவே Redmi Note 10S மாடலின் டிஸ்பிளே 6.43 இன்ச் ஆக உள்ளது.  செல்ஃபி பிரியர்களை கவரும் விதமாக முன் பக்க கேமரா 13 மெகாபிக்ஸல் கொண்டதாகவும், பின்பக்க கேமராவை பொருத்தவரை 64+8+2+2 மெகா பிக்ஸல்கள் கொண்ட 4 கேமராக்களும் இடம் பெற்றுள்ளன. MediaTek Helio G95 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 11 OS கொண்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை 5000mAh ஆகவும், சார்ஜிங் 33W ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிவேக சார்ஜ் எதிர்பார்க்கலாம்.




ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்:
ரெட்மியின் ஸ்மார்ட்வாட்சை பொருத்தவரை விலை ரூ.3,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாட்ச் மூன்று வண்ணங்களிலும், வார் பகுதி 4 வண்ணங்களிலும் கிடைக்கும்.Android, iOS சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட் வாட்ச் இருபாலினரும் அணியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


எந்த இக்கட்டான காலகட்டமாக இருந்தாலும் மொபைல் போன் விரும்புவோர், அவற்றை வாங்குவதை தவிர்ப்பதே இல்லை. கொரோனா ஊரடங்கு காலகட்டமாக இருந்தாலும் ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ள இந்த மொபைல் போன்கள் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எண்ணத்தில் தான் நெருக்கடியான காலகட்டத்திலும் துணிந்து ரெட்மி தனது படைப்புகளை களமிறக்குகிறது. பலர் இதற்காக நீண்ட நாட்கள் காத்தும் இருக்கிறார்கள்.