உலகின் AI தொழில்நுட்பங்களுக்கிடையே நடத்தப்பட்ட அழகி போட்டியில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கென்சா லெய்லி என்கிற AI பட்டத்தை வென்றது.
முதல் AI அழகி:
மொராக்கோவைச் சேர்ந்த ஹிஜாப் அணிந்த கென்சா லெய்லி, உலகின் முதல் மிஸ் ஏஐ என்ற பட்டத்தை வென்றுள்ளார். இதுகுறித்து லெய்லி தெரிவிக்கையில் கூறியதாவது, "மனிதர்களைப் போன்ற உணர்ச்சிகளை நான் உணரவில்லை என்றாலும், நான் இதைப் பற்றி உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறேன். லெய்லி தனது நாட்டில் ஒரு லைஃப்ஸ்டையில் இன்ஃபுலுவன்சராக ( lifestyle influencer ) இருக்கிறார்.
அவர் பட்டத்தை கோர, 1,500 க்கும் மேற்பட்ட கணினிமயமாக்கப்பட்டலுடன் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, லெய்லி 20,000 டாலர் பரிசை வென்றார், இது அவரை உருவாக்கிய தொழில்நுட்ப நிர்வாகிக்கு செல்லும்.
இந்த போட்டி ஏப்ரல் மாதம் Fanvue World AI Creator விருதுகளால் (WAICA) நடத்தப்பட்டது. Fanvue இணை நிறுவனர் வில் மோனாங்கே, [WAICAs] வழங்கும், AI-ன் முதல் விருது உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்த விருதானது, AI படைப்பாளியின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், தரநிலைகளை உயர்த்துவதற்கும், AI கிரியேட்டர் பொருளாதாரத்திற்கு சாதகமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒரு அருமையான வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
”மொராக்கோ கலாச்சாரத்தை வெளிப்படுத்துவேன்”
அழகு, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவுகளில் சிறந்து விளங்கிய முதல் 10 இடங்களில் மனித மற்றும் AI போட்டி நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு இறுதி மூன்று AIகளை தேர்ந்தெடுத்தது.
கடைசியில் பிரெஞ்சு AI அழகி லலினா வலினாவையும், போர்த்துகீசிய AI அழகி ஒலிவியா சியையும், மொராக்கோ AI அழகி கென்சா லெய்லி வென்று பட்டத்தை கைப்பற்றியது. 1,97000 பின்தொடரபவர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டிருக்கும் லெய்லி தெரிவித்துள்ளதாவது, "எனது லட்சியம் எப்போதுமே மொராக்கோ கலாச்சாரத்தை பெருமையுடன் வெளிப்படுத்துவதாகும், அதே நேரத்தில் பல முனைகளில் என்னைப் பின்தொடர்பவர்களுக்கு தொடர்ந்து கூடுதல் மதிப்பை வழங்குவதாகும்." பெண்களை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், AI பற்றிய நேர்மறையான விழிப்புணர்வைப் பரப்பவும் தனது புகழை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"மொராக்கோவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்த இது ஒரு வாய்ப்பு. தொழில்நுட்பத் துறையில் மொராக்கோ, அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் முஸ்லீம் பெண்களை முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பு" என்று அவரது மனித படைப்பாளி மெரியம் பெஸ்ஸா தி போஸ்ட்டிடம் தெரிவித்துள்ளார்.