VLC மீடியா பிளேயருக்கு தடை ?
இன்றைய காலக்கட்டம் ஸ்மார்ட் வேர்ல்டாக மாறிவிட்டது. நாள்தோறும் புதிய புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய புதிய செயலிகள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் வருவதற்கு முன்பாக நாம் அதிகம் பயன்படுத்திய நாஸ்டாலஜிக் செயலி ஒன்று உள்ளது. அதுதான் VLC. வீடியோக்களை பிளே செய்ய பெரிதும் பயன்படுத்தப்பட்ட இந்த விடியோ பிளேயரை இந்தியாவில் தடை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வீடியோ லேன் பிராஜக்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மீடியா பிளேயர் இந்தியாவில் இயங்காது என சமந்தப்பட்ட நிறுவனமோ அல்லது இந்திய அரசோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை
ஏன் தடை ?
இந்த தடைக்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஆனால் சீனாவில் இருந்து செயல்படும் சிகாடா (Cicada) என்ற சைபர் அட்டாக் குழுவினரால் VLC முடக்கப்பட்டதே இதற்கான காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.ஏற்கனவே பலமுறை வி.எல்.சி மீடியா பிளேயர் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது நாம் அறிந்ததே . அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஆப் ஸ்டார்களில் கிடைக்கிறது :
ஆனால் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பிறகு எப்படி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது என நீங்கள் கேட்கலாம் . சமீபத்தில் பல பயனர்கள் videolan.org என்னும் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக VLC மீடியா பிளேயரை திறக்க முற்ப்பட்டிருக்கின்றனர் ஆனால் தளம் திறக்கவில்லை.ஆனால் மைக்ரோ சாஃப்ட் ஸ்டோர் , ஆப்ஸ் ஸ்டோர் , பிளே ஸ்டோர் உள்ளிட்டவைகளில் இன்னும் VLC மீடியா பிளேயர் செயலிகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. அதன் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் . அதே போல முன்பு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் வி.எல்.சி பிளேயரையும் பயன்படுத்த முடிகிறது.
எப்படி பதிவிறக்கம் செய்யலாம்?
videolan.org தளத்தில் இருந்து பிளேயரை அனுக முடியாததற்கு சர்வர் பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் கேட்ஜெட் நவ் பத்திரிக்கையாளர்கள் கூகிள் தேடலைச் செய்து, பரிந்துரையிலிருந்து 'விஎல்சி' குறிச்சொல்லைக் கிளிக் செய்தவுடன், வலைத்தளம் விண்டோஸ் லேப்டாப்பில் திறக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர் . “www.videolan.org/vlc/ என்னும் இணையதளம் வாயிலாக அவர்கள் பதிவிறக்கம் செய்ததாக தெரிவிக்கின்றனர். இதற்காக எட்ஜ் மற்றும் குரோம் பிரவுசரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் . இரண்டு , மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள் நீங்களும் தளத்தை அனுகி , VLC மீடியா பிளேயரை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் . மேற்க்கண்ட முயற்சி உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை பயன்படுத்தலாம் . ஆனால் அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னதாக அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் . இல்லையென்றால் புதிய வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.