பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் போல் (poll) ஆப்ஷனை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப்.
அதற்கான முதற்கட்ட வேலைகளில் அந்நிறுவனம் இறங்கிவிட்டது. குரூப்பில் உள்ள பயனர்கள் எதாவது ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு போல ஓட்டு போடும் முறையிலான poll ஐ உருவாக்கலாம்.டெலக்ராமில் இந்த வசதி தற்போது இருக்கும் நிலையில் அதேபோன்ற வசதியை வாட்சப்பிலும் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது வாட்சப் நிறுவனம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதில் தாங்கள் எதற்கு வாக்களிகக் வேண்டுமோ அதற்கு வாக்களிக்கலாம். எந்த ஆப்சனுக்கு எவ்வளவு வாக்குகள் என்ற விவரங்கள் அதில் தெரியவரும். ஆனால் யார் எந்த ஆப்சனுக்கு வாக்களித்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாது. மற்ற மெசேஜ்களைப் போலவே இதுவும் எண்ட் டூ எண்ட் முறையில் இருக்கும். poll முறையில் எத்தனை ஆப்ஷன், வாக்களிப்பது எப்படி உள்ளிட்ட வேறு எந்த தகவலையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. தற்போது முதற்கட்ட சோதனையில் மட்டுமே இருப்பதால் இன்னும் இந்த முறை பீட்டா வெர்ஷனக்கே அறிமுகம் ஆகவில்லை. முதற்கட்ட சோதனை முடிவடைந்தபின் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகும். அங்குள்ள பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அனைவருக்கும் விரைவில் அறிமுகமாகும்.
வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேடி எடுக்க நாம் எல்லாம், மொபைலை போட்டு ஸ்க்ரோல் செய்கிறோம். வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் நாம் இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக அப்டேட் கொடுக்கப்படவுள்ள வாட்ஸ் அப்பில் குழு அல்லது பர்ஷ்னல் ஷேட்டில் கொடுக்கப்படவுள்ள சர்ச் பாக்ஸில் தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதிக்குரிய மெசேஜ்கள் ஸ்கிரீனில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் WhatsApp beta iOS 22.0.19.73-வானது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாட்ஸ் அப் குழுவில் உள்ள தேவையற்ற மெசேஜ்களை குழுவின் அட்மின் நீக்கி, குழு மிகவும் இயல்பாக இயங்கவைக்க இந்த அப்டேட் உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Past group participants:
இதுவரை வாட்ஸ் அப் குரூபில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று காண முடியும். இந்நிலையில், விரைவில், வாட்ஸ் அப் குழுவிலிருந்து யாராவது விலகி இருந்தார் அவர்கள் பற்றிய தகவலை 60 நாட்களுக்கு பெறும் வகையில் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ் அப் குழுவில் இருந்து யாரெல்லாம் லெஃப்ட் ஆகியிருந்தால் அவர்களை கண்டுகொள்ள முடியும்.