ஸ்டேட்டஸ் அப்டேட்கள் குறித்து புகாரளிக்கும் வசதியை உருவாக்கும் பணியில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. எனினும், இந்த வசதியை கொண்டுவருவதால் ஏற்கனவே இருக்கும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் வசதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாட்ஸ்அப் நிறுவனமோ அல்லது வேறு யாரோ கூட பயனர்களின் மெசேஜ்களையும், தனிப்பட்ட அழைப்புகளையும் கேட்க முடியாது. புகார் அளிக்கும் ஆப்ஷன் வைத்தால் பயனர்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு தான் என்கிறது வாட்ஸ்அப்  நிறுவனம்.


சேவை விதிமுறைகளை மீறக்கூடிய சந்தேகத்திற்கிடமான ஸ்டேட்டஸ் அப்டேட்டை பயனர்கள் கண்டால், புதிய விருப்பத்தின் மூலம் அதை மதிப்பாய்வு குழுவிடம் தெரிவிக்க முடியும். புகாரளிக்கும் செய்திகளைப் போலவே, நிலைப் புதுப்பிப்பும் மிதமான காரணங்களுக்காக நிறுவனத்திற்கு அனுப்பப்படும். அதனால் விதிமீறல் உள்ளதா என்பதை அவர்கள் பார்க்கலாம்.


ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளைப் புகாரளிக்கும் திறன் வளர்ச்சியில் உள்ளது மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவின் எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்று அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம், மெசேஜிங் இயங்குதளம் சில பீட்டா சோதனையாளர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் டெஸ்க்டாப்பில் குழு சாட்களில் சுயவிவர புகைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது.


முன்னதாக, வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் சப்போர்ட்டை டெஸ்க்டாப் வெர்ஷனுக்கும் வாஸ்ட்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் 10 இயங்குதளம் 64-பிட் வெர்ஷனிலும் மேக்ஓஎஸ் 10.13 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டட் வெர்ஷன் என்பதால் உங்கள் போன் அல்லது உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் நீங்கள் பேசுவதை கேட்கவோ அல்லது உங்களை பார்க்கவோ எங்கள் நிறுவனத்தில் யாராலும் முடியாது.


நாங்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிலிருந்து வீடியோ கால் செய்து பார்த்து வருகிறோம். ஏதேனும் பிரச்சனை இருந்தால் மேம்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாட்ஸ்அப் வெப்பில் இருந்து வீடியோ கால் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் வெப்பில் லாகின் செய்யவும். நீங்கள் யாரை அழைக்க வேண்டுமோ அவர்களின் கான்டாக்டாட்டை தேர்வு செய்து வீடியோ கால் ஐகான் மீது கிளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெப்பில் வீடியோ கால்களை  செய்ய முடியும். டெக்ஸ்டாப் வெர்ஷனில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்ய முடியும். தற்போதைக்கு ஒன்-டு-ஒன் வாய்ஸ் அண்ட் வீடியோ கால்ஸை செய்ய முடியும். 


வீடியோ ஐகான் மீது தட்டவும். பின்னர், கீழே நீங்கள் பட்டன்களை பார்ப்பீர்கள். மூன்று ஸ்டார்ஸ் இருக்கும் பட்டனை கிளிக் செய்தால் மோர் ஆப்ஷன்ஸ் வரும். அதன் மீது தட்டினால் ஸ்கிரீன் ஷேர் ஆப்ஷன் வரும்.
இவ்வாறாக நீங்கள் வாட்ஸ்அப் வீடியோ காலை ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப்பில் கான்ஃபரென்ஸ் காலை எப்படி மேற்கொள்ள முடியும்? வாட்ஸ்அப் அக்கவுண்டை ஓபன் செய்து, "கால்ஸ்" டேப் மீது தட்டவும்.


இவ்வாறாக ஸ்மார்ட்போனில் இருந்து மட்டுமல்லாமல், டெஸ்க்டாப்பிலிருந்தும் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்ய முடியும்.