நல்ல நேரம் :


காலை 7.15 மணி முதல் காலை 8.00 மணி வரை


மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த ஊர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். நிறைவான நாள்.


ரிஷபம்


சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் விவாதம் ஏற்பட்டு நீங்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.


மிதுனம்


உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனை தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் மேம்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். தடைகள் நிறைந்த நாள்.


கடகம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.  வர்த்தகம் தொடர்பான துறைகளில் உள்ள புதிய நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். லாபம் மேம்படும் நாள்.


சிம்மம்


கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதை உறுத்திய விஷயங்களில் தெளிவு பிறக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கில் சாதகமான முடிவு கிடைக்கும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்பு மேம்படும். நலம் நிறைந்த நாள்.


கன்னி


உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.


துலாம்


குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். மறதி நிறைந்த நாள்.


விருச்சிகம்


மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


தனுசு


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


மகரம்


உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்புடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். ஆசை அதிகரிக்கும் நாள்.


கும்பம்


இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அனுசரித்து செல்லவும். வரவு நிறைந்த நாள்.


மீனம்


புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் நன்மை ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். சிக்கல்கள் நிறைந்த நாள்.