Whatsapp: இந்த 49 ஸ்மார்ட்ஃபோன்களில் இனி வாட்ஸ்-அப் செயலி செயல்படாது.. வெளியான ஷாக் அறிவிப்பு

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் மாடல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வாட்ஸ்-அப் செயலி:

Continues below advertisement

தகவல் பரிமாற்றத்தில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம்  குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின்  மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.  டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்வதோடு இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்களும் உள்ளிட்டவற்றையும் எளிதாக அனுப்ப முடிகிறது. இது பயனாளர்களை கவரும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.

அடுத்தடுத்து வரும் அப்டேட்:

மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பயனர்களுக்கு இலகுவான விஷயங்களை அப்டேட் செய்து, செயலியை மென்மேலும் மெருகேற்றி வருகிறது. அந்த வகையில் வழங்கப்படும் அப்டேட்கள், ஆரம்ப காலங்களில் அறிமுகமான ஸ்மார்ட் போன்களில் கிடைப்பது என்பது சிரமமானதாக உள்ளது. இதன் காரணமாக, பழைய மாடல் ஸ்மார்ட் போன்களில் தங்களது வாட்ஸ்-அப் செயலியின் சேவையை மெட்டா நிறுவனம் படிப்படியாக நிறுத்தி வருகிறது.

சேவையை நிறுத்தும் வாட்ஸ்-அப் செயலி:

அந்த வகையில் தான், வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் 49 ஸ்மாட் போன் மாடல்களில், இனி வாட்ஸ்-அப் செயலி சேவை வழங்கப்பட மாட்டாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, ஆப்பிள், சாம்சாங், ஹுவாய் மற்றும் பல நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அவை பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான செல்போன் மாடல்கள் என்பதும், அவற்றில் பல மாடல்கள் இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்-அப் சேவையை இழக்கும் ஸ்மார்ட்போன்கள்:

ஆப்பிள் ஐபோன் 5

ஆப்பிள் ஐபோன் 5 சி

ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்

கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE

Grand X Quad V987 ZTE

HTC டிசையர் 500

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

குவாட் எக்ஸ்எல்

லெனோவா ஏ820

LG Enact

எல்ஜி லூசிட் 2

எல்ஜி ஆப்டிமஸ் 4X HD

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3

எல்ஜி ஆப்டிமஸ் F3Q

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7

எல்ஜி ஆப்டிமஸ் L2 II

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II

எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual

எல்ஜி ஆப்டிமஸ் L4 II

எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual

எல்ஜி ஆப்டிமஸ் எல்5

எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்

எல்ஜி ஆப்டிமஸ் L5 II

எல்ஜி ஆப்டிமஸ் எல்7

எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II

எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual

எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி

மெமோ ZTE V956

சாம்சங் கேலக்ஸி Ace 2

சாம்சங் கேலக்ஸி கோர்

சாம்சங் கேலக்ஸி S2

சாம்சங் கேலக்ஸி S3 மினி

சாம்சங் கேலக்ஸி Trend II

சாம்சங் கேலக்ஸி Trend Lite

சாம்சங் கேலக்ஸி Xcover 2

சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்

சோனி எக்ஸ்பீரியா மிரோ

சோனி எக்ஸ்பீரியா நியோ எல்

விகோ சின்க் ஃபைவ்

விகோ டார்க்நைட் ZT, ஆகிய மாடல்களில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் வாட்ஸ்-அப் செயலி சேவை செயல்படாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola