PM Modi Brother Accident: என்ன நடந்தது? மைசூரூவில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி காயம்..!

PM Modi Brother Accident: மைசூரூவில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி காயமடைந்துள்ளார்.

Continues below advertisement

PM Modi Brother Accident:  மைசூரூவில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி காயமடைந்துள்ளார். 

Continues below advertisement

பிரதமரின் சகோதரர், அவரது மனைவி, அவர்களது மகன் , மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூரூவில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்றபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானாது. இதனால் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான காரில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் 4 பேரும் JSS தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்த விபத்து மதியம் 1.30 மணியளவில் கடகோலா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அவர்கள் சென்ற கார், பந்திப்பூர் செல்லும் வழியில், சாலை நடுவில் இருந்த டிவைடரில் மோதியதாக கூறப்படுகிறது. மைசூரு காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் சம்பவ இடத்தையும் மருத்துவமனையையும் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola