வாட்ஸப்பில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. WhatsApp Channels -ல் இனி QR Code பயன்படுத்தின் இணையும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு தங்களது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.
WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, பயனர்கள் ஒருவரது வாட்ஸ் அப் சானலின் பெயர் உள்ளிட்டவற்றை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் QR கோட் மூலம் அதில் இணையும் வசதி வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேனலுக்கும் தனியாக ஒரு QR Code உருவாக்க முடியும். இதனால், சேனல் வைத்திருக்கும் பயனர்கள் இனி லிங்க் ஷேர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக QR Code-ஐ ஷேர் செய்து பின் தொடர அழைக்கலாம். இது செயல்முறையை எளிமையாக்கும் என்பதால் பயனர்களின் வசதிற்கேற்ப உருவாக்கப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் தொழில்முனைவோர்கள், மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ் அப் செயலில் புதிய தொடர்பு எண்களை சேமிக்க முடியும். ஏற்கனவே, மொபைலில் சேமித்த எண்கள் மட்டுமே வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும் என்றிருந்தது. இப்போது வாட்ஸ் அப்ல தொடர்பு எண்ணை சேவ் செய்ய முடியும். 'Sync Contacts to Phone' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது 'Choose to Save only WhatsApp or Sync to your Phone' இவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். தொழில் ரீதியாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள், தனிப்பட்ட பயன்பாடு என எதுவாக இருந்தாலும் அதற்கேற்றவாறு செட்டிங்ஸை மாற்ற முடியும்.
ஃபில்டர் ஆப்சனில் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், குடும்பம், பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் என வகை பிரித்து லிஸ்ட் செய்து வைக்கலாம். இது சாட் பாக்ஸில் சர்ச் Tab-ல் Favourites, Groups அருகில் இருக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வாட்ஸ் அப் சாட்டில் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அவர்களை லிஸ்ட் வைத்து எளிதாக அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். அதோடு மட்டுமல்லாமல் பயனர்களை கவனத்துடன் செயல்படவும் இந்த ஃபில்டர் உதவும் என மெட்டா தெரிவித்திருக்கிறது. தேவையில்லை எனில் இதை டெலீட் செய்யலாம். வாட்ஸ் அப் பிசினஸ் செயலிகளுக்கு டார்க்/ லைட் தீம் அறிமுகம் செய்யப்பட இருக்குறது.