புதுச்சேரியின் கிருஷ்ணாநகர் பகுதியில் மீட்புப் பணிகள் காலை 6.15 மணி முதல் தொடங்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஒருவழியாக, புதுச்சேரி அருகே சூறைக்காற்றுடன் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. புயலாக வலுப்பெறாது, பெரும் மழை இருக்காது, தென் மாவட்டங்களை தாக்கும் என, மாறி மாறி வானிலை எச்சரிக்கைகள் வெளியாகின.


புதுச்சேரியை சிதைத்த ஃபெஞ்சல் புயல்:


ஆனால், இறுதியால் வலுவான சூறாவளிக்காறு நிறைந்த புயலாக சென்னைக்கு மிக அருகாமையில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்ல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 7 வடமாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று இரவு நிலவரப்படி 22 செ.மீ., மழை கொட்டியது. 


கடந்த 30ம் தேதி முதல் இன்று காலை வரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் அதிகபட்சமாக 49 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. பாண்டிச்சேரியில்  46.95 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 


இந்த நிலையில், புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தார்.


மீட்பு பணிகளில் இறங்கிய இந்திய ராணுவம்:


அரசு அதிகாரி தலைமையிலான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண படைப்பிரிவினர், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றனர். சுமார் 5.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்திறங்கியதும், மேஜர் அஜய் சங்வான், நிலைமை குறித்து விளக்கினார்.


புதுச்சேரியின் கிருஷ்ணாநகர் பகுதியில் சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சில இடங்களில் நீர்மட்டம் சுமார் 5 அடியை எட்டியது. இதில், சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்க இந்தப் படைப்பிரிவு நிலைநிறுத்தப்பட்டது. மீட்புப் பணிகள் காலை 6.15 மணி முதல் தொடங்கப்பட்டு, இரண்டு மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.


இதையும் படிக்க: Vijay Sethupathi : "அதனால எனக்கு நிறைய பிரச்சன வருது"...வில்லன் கதாபாத்திரங்களுக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி