வாட்ஸ் அப் விரைவில் 'Favorite’ என்ற டேப் வசதியை புதிதாக அறிமுகம் செய்ய உள்ளது.


மெஜேச் செய்வதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, இப்போது மாறியிருக்கும் வளர்ச்சி என்பதை யோசித்து பார்த்தால் தெரியும். அலுவலக வேலை, தொழில் செய்வது, பண பரிமாற்றம் என பல்வேறு சேவைகளை வாட்ஸ் அப்பிலேயே செய்து முடித்துவிடலாம். அதற்கேற்றவாறு மெட்டா நிறுவனமும் வாட்ஸ் அப் பயனர்களுக்கான பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. 


WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியில் மெசேஜ் செய்வதை எளிதாக்குவதற்காக புதிய அம்சத்தை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வரும் வசதியின் மூலம் கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தவர்கள் என்பதை நோட்டிஃபை செய்யும் என்று தெரிவித்திருந்தது.


அடுத்து பல்வேறு அப்டேட்கள் வாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 ‘Favorite’ Tab


வாட்ஸ் அப்-ல் நிறைய குரூப்கள் இருக்கும். வாட்ஸ் அப் சார்ந்த பணி, தொழில் என்றான பிறகு கான்டக்ட்டில் தேடி எடுத்து மெசேஜ் செய்ய வேண்டாம் என்பதற்காகவே வாட்ஸ் அப் Pin வசதியை வழங்கியது. இதன் மூலம் நீங்கள் அடிக்கடி மெசேஜ் செய்யும் நபர்களை Pin செய்யலாம். இதன் மூலம் வாட்ஸ் அப் திறந்தவுடனேயே மூன்று சாட்பாக்ஸ் மட்டும் எப்போதும் மேலேயே இருக்கும்.


இப்போது வரை மூன்று பேரை மட்டுமே pin செய்ய முடியும். இது விரைவில் 5-ஆக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 



Favourite - காணவும்.


வாட்ஸ்-அப் பயன்படுத்து எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக பேவரைட் டேப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய அப்டேட்களுக்கான உருவாக்கும் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது மெட்டா நிறுவனம்.


அதில் ஒன்று பேவரைட் டேப். இதன் மூலம் அடிக்கடி மெசேஜ் செய்யும் நபர்களை இந்த லிஸ்டில் சேர்க்கலாம். இந்த வசதி வந்தால் வாட்ஸ் அப்பை ஸ்க்ரோல் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. உங்களுடைய பேவரைட் நபர்களை தனியா ஒரு லிஸ்ட்டில் வைக்கலாம். இதிலிருக்கும் நபர்களை நீக்கவும் முடியும். அதோடு, லிஸ்ட்டை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றவும் முடியும்.   'Re-oder'  செய்ய முடியும்.


இதன் மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்க்ரோல் செய்யாமல் மெசேஜ் அனுப்ப, ஆடியோ, வீடியோ கால் பண்ண முடியும். முழு கான்டக்ட் லிஸ்டில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. 


இந்த புதிய வசதி எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், இது ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முதலில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நோட்ஸ் அம்சம் - வாட்ஸ் அப் வெப்


 WhatsApp beta for Android 2.24.9.12 வர்ஷனில்  முக்கியமான விசயங்களை ‘நோட்ஸ்’ என்பதில் குறிப்பிடலாம். இதன் மூலம் தொழில், வேலை சார்ந்த முக்கியமான நிகழ்வுகள், நினைவுபடுத்த வேண்டியவை ஆகியவற்றை சிறு குறிப்பாக எழுதலாம். தொழில் ரீதியிலாக அனுப்ப வேண்டிய பணம், ஃபைல் உள்ளிட்டவற்றை நோட்ஸாக எழுதுவது குறித்த அப்டேட் மொபைல் பயனர்களுக்கு கிடைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இதோடு வாட்ஸ் அப் வெப் வர்ஷனிலும் புதிய நோட்ஸ் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயோவிற்கு கீழே ‘Notes' என்று ஒரு டேப் இருக்கிறது. இது வாட்ஸ் அப் பிசினஸ் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் / வாடிக்கையாளர் குறித்த விவரங்கள், அவர்களின் விருப்பத் தேர்வு, நிதி சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்க முடியும்.


இந்த தகவல்கள் உங்களைத் தவிர யாராலும் காண முடியாது. இந்த வசதியில் உள்ள கூடுதல் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. முழுமையாக வடிவமைக்கப்பட்ட உடன் சிறந்த வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமீபத்தில் வெளியான நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group, ஃபோட்டோஸ், வீடியோ, லிங்க்ஸ், ஜிஃப், ஆடியோ, டாக்குமென்ட், Polls போன்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.


இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று  ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்யும் வசதியும் விரைவில் வெளியாக உள்ளது.