Whatsapp New Feature: வாட்ஸ்-அப் செயலியில் வந்தது அந்த அப்டேட்.. ஆப்பிள் பயனாளர்களுக்கு விடிவுகாலம்..!

வாட்ஸ்-அப் செயலியில் ஆப்பிள் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த, அப்டேட் ஒருவழியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Continues below advertisement

வாட்ஸ்-அப் செயலியில் ஆப்பிள் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த, அப்டேட் ஒருவழியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசும்போதே, இனி மற்ற செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

Continues below advertisement

வாட்ஸ்-அப் அப்டேட்:

மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. சில அப்டேட்களை சோதனை முறையில் பீட்டா பயனாளர்களுக்கு வழங்கி, பின்பு ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் வாட்ஸ்-அப் பயனாளர்களின் பயன்பட்டிற்கு வழங்கும். ஒரு சில அப்டேட்கள் மட்டும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படுவதில்லை. அதில் ஒன்று தான், பிக்சர் - இன் - பிக்சர் மோட் ஆப்ஷன்.

பிக்சர் - இன் - பிக்சர் மோட்:

வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசிக்கொண்டே மற்ற செயலிகளையும் பயன்படுத்தும், இந்த பிக்சர் - இன் - பிக்சர் மோட் அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த அம்சம் ஆப்பிள் பயனாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதனால்,  ஆப்பிள் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் செய்தால், அதனை துண்டிக்கும் வரை வேறு எந்த ஒரு செயலியையும் பயன்படுத்த முடியாது. ஒருவேளை வேறு செயலியையை பயன்படுத்தினால் வீடியோ கால் பாஸ் ஆகிவிடும்.

ஆப்பிள் பயனாளர்களுக்கும் வந்தது அப்டேட்:

பிக்சர் - இன் - பிக்சர் மோட் அம்சம் ஆப்பிள் பயனாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் அந்த முயற்சியில் களமிறங்கியதோடு, கடந்த டிசம்பர் மாதம் சோதனையையும் தொடங்கியது. இந்நிலையில்,  பிக்சர் - இன் - பிக்சர் மோட் ஆப்ஷன் ஆப்பிள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆப்பிள் பயனாளர்களும் இனி வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம்.

100 புகைப்படங்களை பகிரலாம்:

முன்னதாக, வாட்ஸ்-அப் செயலியில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் புதிய அம்சம் அண்மையில் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேர்த்து 100 எண்ணிக்கை வரையிலான ஆவணங்களை ஒரே நேரத்தில் பகிர முடியும். இதன் மூலம், ஒவ்வொரு முறையும் 30 புகைப்படங்களை தேர்வு செய்து மீண்டும், மீண்டும் பகிர்வதற்கான நேரம் மிச்சமாகும்.

கெப்ட் மெஸ்ஸேஜ் வசதி:

கெப்ட் மெசேஜ் என்ற புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த வசதி விரைவில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்-அப் குழுவில் டிஸ்ஸப்பியரிங் மேசேஜ் மோட் செயல்பாட்டில் இருந்தாலும், கெப்ட் மெசேஜ் -ஐ எனேபிள் செய்யும்போது அதிலுள்ள மெசேஜ் காணாமல் போகாது. குழுவின் பெயர் மீது தொட்டால் கெப்ட் மெசேஜ் ஆப்ஷன் தோன்றும், அதன் கீழ் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து மெசேஜ்களையும் காணலாம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola