Whatsapp Updates: மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் அணுகலை எளிதாக்கும் நோக்கில், மேலும் புதிய ஐந்து அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட் போன்று அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய ஐந்து அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, உயர்தர புகைப்படங்கள், வீடியோ மெசேஜ், சைலன்ஸில் போடும் வசதி, ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்பர், ஸ்க்ரீன் ஷேரிங் போன்ற வசதி வழங்கப்பட்டுள்ளன.
- உயர்தர புகைப்படங்கள்:
வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் தரம் குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம்.
- ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன்:
- வீடியோ மெசேஜ்:
மெசேஜ் அனுப்புவதற்கு மேலும் ஒரு புதிய வசதியை மெட்டா கொண்டு வந்துள்ளது. அதன்படி, 'Short Video Message’ என்ற புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நாம் ஒருவருக்கு வீடியோ மூலம் நமது தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம். Text Box என்ற ஆப்ஷனுக்கு அருகில் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் 60 நிமிடங்கள் பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைலன்ஸில் போடும் வசதி:
தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் தாமாகவே சைலன்ஸில் போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, செட்டிங்ஸ் அம்சத்தில் பிரைவசிக்குள் சென்று கால்ஸ் எனும் பிரிவில் silence unknown calls என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், அநாவசிய தொந்தரவுகளை பயனாளர்கள் தவிர்க்கலாம்.
- ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்ஃபர்:
சாட் ஹிஸ்டரியை எளிமையாக ஒரு போனில் இருந்து மற்றொரு போனிற்கு மாற்றுவதற்கான புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. சாட் ஹிஸ்டரி பரிமாற்றத்தை தொடங்க முதலில் க்யூ.ஆர் கோடை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்பு அடுத்தடுத்து கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி எளிதில் தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.