Whatsapp: பழைய சாப்ட்வேர்களை கொண்டிருக்கும்  மொபைகளில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.


பயனர்களின் அனுபவம், பிரைவசி, பாதுகாப்புபை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை மாதாமாதம் வழங்கி வருகிறது. அதாவது, வாட்ஸ் அப்பில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும்படி வரையிலான அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.


வாட்ஸ் அப் செயலி இயங்காது:


இந்நிலையில், வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்படி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 24ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு முந்தைய சாப்ட்வேரில்  இயங்கும் அனைத்து மொபைல்களிலும் வாட்ஸ் அப் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல்கள் எல்லாம் பழைய மாடல்கள் தான். இந்த மொபைல்களை பெரும்பாலான மக்கள் தற்போது பயன்படுத்துவதில்லை. 


இதுகுறித்து வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, நாங்கள் எந்தெந்த சாதனங்கள் மற்றும் மென்பொருட்கள் மிகவும் பழமையானவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை இன்னும் அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்கிறோம். எந்தெந்த சாதனங்களில் சமீபத்திய பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாமல், வாட்ஸ்அப்பை இயக்கத் தேவையான செயல்பாடுகள் இல்லை என்பது குறித்து ஆய்வு செய்து தான் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


எந்தெந்த மொபைல்கள்:


நெக்ச்ஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட்2, ஹெச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா இசெட், LG Optimus G Pro, சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி எக்ஸ் நெக்ச்ஸ், ஹெச்டிசி சென்சேஷன், மோட்டோரோலா டிரயோடு ரைர், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10.1, ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஜகோனியா டேப் A5003, சாம்சங் கேலக்ஸி எஸ், ஹெச்டிசி டிசைனர் எச்டி, LG Optimus 2X, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா Arc3 ஆகிய மொபைல்களில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி கண்டுபிடிப்பது?


உங்கள் மொபைல் எந்த ஆண்ட்ராய்டு மாடலில் இருக்கிறது என்பது தெரிந்துகொள்ளலாம். அதன்படி,  உங்கள் மொபைலில் Settings > About phone > Software information என்ற ஆப்ஷனுக்கு சென்று உங்கள் மொபைல் வேர்ஷனை காண முடியும். மேலே குறிப்பிடப்பட்ட மொபைல்களை பயன்படுத்துவோருக்கு மெசேஜ் மூலம் வாட்ஸ் அப் வார்னிங் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


SpaceX Starlink Satellite: அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்.. 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!