பயனாளர்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த மீண்டும் தயாராகி வருகிறது வாட்ஸ்அப். இந்த முறை, பயனர்களை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் கவனம் செலுத்தி வருகிறது.






உள்நுழைவு ஒப்புதல் என்று அழைக்கப்படும் இந்த அம்சம், two-step சரிபார்ப்பு அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பல சாதன பயனர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் வேறு சாதனத்திலிருந்து உள்நுழையும்போது மெசேஜ் பெற இந்த புதிய அம்சம் அனுமதிக்கும். ஐபோனில் கடந்தகால குழு உறுப்பினர்களை பார்க்க பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.


வாட்ஸ்அப் அம்ச டிராக்கர், வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதன் சமீபத்திய மென்பொருளின் பீட்டா பதிப்பை சோதித்து வருகிறது. உள்நுழைவு ஒப்புதல் எனப்படும் புதிய பாதுகாப்பு அம்சம் எதிர்கால புதுப்பிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


புதிய அம்சம், வேறொருவர் வேறு சாதனத்திலிருந்து தங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் பயனர்களுக்குத் தகவல் தெரிவிக்கும். கணக்கு ஏற்கனவே உள்நுழைந்திருக்கும் முதன்மை சாதனத்திலிருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு மட்டுமே ஒரு பயனர் இரண்டாம் நிலை சாதனத்தில் உள்ள கணக்கில் உள்நுழைய முடியும்.


பயனரின் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதில் இருந்து மோசடி செய்பவர்களைத் தடுக்க இந்த அம்சம் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அம்சம் பயனர்களின் தகவல் மற்றும் கணக்குகள் திருடப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.


வாட்ஸ்அப்பில் ஏற்கனவே two-step சரிபார்ப்பு அமைப்பு உள்ளது. இது பயனரின் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க உதவும். பயனர்கள் ஏற்கனவே பாதுகாப்புக் குறியீட்டைப் பகிர்ந்திருக்கும் பட்சத்தில் அவர்களைப் பாதுகாக்கவே இந்த அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. கசிந்த ஸ்கிரீன் ஷாட்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, புதிய அம்சம், ஒரு பயனர் வேறு சாதனத்திலிருந்து தங்கள் கணக்கில் உள்நுழையும் போதெல்லாம் பயனர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண