சாட் லாக் (Chat Lock feature) வசதி விரைவில் வாட்ஸ்- அப் வெப் (WhatsApp Version) வர்சனில் வெளியாக உள்ளது.
வாட்ஸ்-அப்
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறே அதன் பாதுகாப்பிற்கான அம்சங்கள் குறித்தும் பயனர்களிடம் கேள்வி எழும் அதற்கேற்றவாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் -அப் நிறுவனம் விரைவில் வெப் வர்சனில் சாட் லாக் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பீட்டா வர்சனில் இது உள்ளது.
வாட்ஸ் -அப் வெப் வர்சனில் இடது பக்கம் தனியே ஒரு ஐகான் இருக்கும். அதில், பாஸ்கோட் (Passcode) அளித்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்ஃபோனில் உள்ள வாட்ஸ்-அப் செக்யூரிட்டி கோர்ட்/ ஸ்கீன் லாக் மூலம் மட்டுமே அன்லாக் செய்ய முடியும். இந்த பீட்டா வர்சனில் இப்போது கிடைத்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
வாட்ஸ்-அப் சமீபத்தில் ஸ்கீன்ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. சீக்ரெட் கோட்’ (Secret Code) என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட சாட்களை மட்டும் ஃபிங்கர் பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீக்ரெட் கோட் (Secret Code) என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் கொண்டு வந்து உள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும்.
எல்லாத்துக்கும் 15 ஜி.பி. மட்டுமே
கூகுள் பயனர்கள் ஏற்கனவே, கூகுள் மெயில், கூகுள் ஃபோட்டோஸ் (Google Photos), டிரைவ் என எல்லாலும் ஒரு இ-மெயில் மூலம் ஸ்டோரேஜ் கணக்கிடப்படும் நடைமுறை உள்ளது. முன்னதாக, இப்படியா நடைமுறை கிடையாது. எல்லாம் தனியாக இருந்தது. கூகுள் மெயிலில் தனியாக ஸ்டோரேஜ் இருந்தது. கூகுள் ஃபோட்டோஸும் அப்படியே. இதெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டதையடுத்து, மொத்தமாக 25 GB ஸ்டோரேஜ் மட்டுமே கூகுள் வழங்கியது. கூடுதலாக வேண்டுமெனில் Google One ஸ்டோரேஜ் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இப்போது வாட்ஸ்-அப் பேக்கப்பும் கூகுள் டிரைவ் உடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் வாசிக்க..