ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு சாட் பேக்கப்(  Chat backups) செய்யும் வசதி இனி கூகுள் டிரைவுடன் (Google Drive) இணைக்கப்படுமென வாட்ஸ்-அப் தெரிவித்துள்ளது. இதனால், இனி இலவசமாக சாட் பேக்கப் செய்ய முடியாது.




வாட்ஸ்-அப்


தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 


தனிப்பட்ட, தொழில் ரீதியிலான காரணங்களுக்காக வாட்ஸ்-அப் பயன்பாடு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம். பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.போலவே, வாட்ஸ்-அப் தன் நெறிமுறைகளையும் அவ்வபோது மாற்றி வருகிறது. 2024ம் ஆண்டின் முதல் பாதியில் வாட்ஸ்-அப் சாட் பேக்கப்களுன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கடந்தாண்டு வெளியிட்ட வரைமுரையில் குறிப்பிட்டிருந்தது.




எல்லாத்துக்கும் 15 ஜி.பி. மட்டுமே


கூகுள் பயனர்கள் ஏற்கனவே, கூகுள் மெயில், கூகுள் ஃபோட்டோஸ் (Google Photos), டிரைவ் என எல்லாலும் ஒரு இ-மெயில் மூலம் ஸ்டோரேஜ் கணக்கிடப்படும் நடைமுறை உள்ளது. முன்னதாக, இப்படியா நடைமுறை கிடையாது. எல்லாம் தனியாக இருந்தது. கூகுள் மெயிலில் தனியாக ஸ்டோரேஜ் இருந்தது. கூகுள் ஃபோட்டோஸும் அப்படியே. இதெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டதையடுத்து, மொத்தமாக 25 GB ஸ்டோரேஜ் மட்டுமே கூகுள் வழங்கியது. கூடுதலாக வேண்டுமெனில் Google One ஸ்டோரேஜ் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இப்போது வாட்ஸ்-அப் பேக்கப்பும் கூகுள் டிரைவ் உடன் இணைக்கப்பட உள்ளது.




வாட்ஸ்-அப் உடன் எந்த இ-மெயில் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ளதோ, அதில் சாட் மெசெஜ்கள் ஸ்டோர் ஆகும். இப்போது இது கூகுள் ட்ரைவ் ‘Google Account cloud storage limit’ உடன் இணைக்கப்பட்டும். வாட்ஸ்-அப் பீட்டாவில் கடந்த ஆண்டு முதல் இது அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கொஞ்ச காலங்களில் எல்லா ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இதே விதிமுறைதான். இனி வாட்ஸ்-அப்-ல் நிறைய புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பேக்கப் செய்ய முடியாது. எல்லாவற்றையும் டெலீட் செய்ய வேண்டும். இல்லையெனில், கூகுள் ஒன் ப்ரீமியம் கட்டணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும்.


வாட்ஸ்-அப் சமீபத்தில் ஸ்கீன்ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. சீக்ரெட் கோட்’ (Secret Code) என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட சாட்களை மட்டும்  ஃபிங்கர்  பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீக்ரெட் கோட் (Secret Code) என்ற ஆப்ஷனை வாட்ஸ்  அப் கொண்டு வந்து உள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும். 


குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதே நேரத்தில், வாட்ஸ்-அப் அதன் பாதுகாப்பு விதிமுறைகள் கருதி மாதாமாதம் சந்தேகத்திற்குரிய கணக்குகளை தடை செய்து வருகிறது. மேலும் வாசிக்க..