வாட்சப் உலகெங்கும் பல மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம், குறிப்பாக இந்தியாவில் ஃபோன் மற்றும் நெட் இருந்தால் கண்டிப்பாக வாட்சப்பும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி. இப்படியான ஒரு ஆப்பில் பலருக்கு தெரியாத சில வசதிகள் ஒளிந்துள்ளன. அவற்றில் அனைவரும் விரும்புவது, தங்கள் 'லாஸ்ட் ஸீன்'னையும், 'ப்ளூ டிக்'கையும் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதுதான். அதை செய்யும் எளிய வழிமுறைகளை வாட்சப்பே நமக்கு தருகிறது.
உங்களுக்கு சில ப்ரைவசியை வழங்க, லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ளூ டிக்கை மறைக்க வாட்ஸ்அப் செட்டிங்ஸில் சில வசதிகள் உள்ளன. இந்த அம்சங்களை நீங்கள் இன்னும் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் இப்போது அவற்றை முயற்சி செய்யலாம். இரண்டு அம்சங்களும் வாட்சப்பின், ப்ரைவசி பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்களும் பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விதமாக கிடைக்கின்றன, ஏனெனில் செய்தியைப் படிக்கும்போது மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்பாத பயனர்களும், விரும்பும் பயனர்களுக்கு உள்ளனர். லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ளூ டிக்கை நீங்கள் எவ்வாறு இயக்கலாம் அல்லது முடக்கலாம் என்பது குறித்து இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்பில் லாஸ்ட் சீனை எப்படி மறைப்பது?
1: நீங்கள் லாஸ்ட் சீனை மறைக்க விரும்பினால், வாட்சப்பை திறந்து 'செட்டிங்ஸ்' (Settings) பிரிவுக்குச் செல்லவும்.
2: இப்போது 'அக்கவுண்ட்ஸ்' (Accounts) பகுதிக்கு சென்று 'ப்ரைவசி'யை க்ளிக் செய்யவும். நீங்கள் செய்யும் எல்லா செட்டிங்ஸும் வாட்சப்பின் மொபைல் மற்றும் வாட்சப் வெப், என இரண்டிற்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3: இப்போது, 'லாஸ்ட் ஸீன்' (Last seen) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்பு செட்டிங்கை "எவரி-ஒன்" (Everyone) இல் இருந்து "Nobody" (Nobody) என்று மாற்றவும்.
குறிப்பு: "எவரிஒன்" (Everyone) "மை காண்டக்ஸ்ட்ஸ்" (My Contacts) மற்றும் "நோபடி" (Nobody) உட்பட மூன்று ஆப்ஷன்கள் அங்கு இருக்கும். முதலில் உள்ளதை தேர்ந்தெடுத்தால் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை வைத்திருப்பவர்கள் அனைவரும் நீங்கள் கடைசியாக பார்த்ததை பார்க்க முடியும். இரண்டாவது உள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் உங்கள் காண்டக்ட்ஸில் உள்ளவர்கள் மட்டுமே நீங்கள் வாட்ஸ்-அப்பில் கடைசியாக பார்த்ததை அறிய முடியும். நீங்கள் "Nobody" ஆப்ஷனை கொடுத்தால், நீங்கள் வாட்ஸ்அப்பை கடைசியாக பார்த்ததை யாரும் பார்க்க முடியாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லாஸ்ட் ஸீன் ஆப்ஷனை மாற்றிக்கொள்ளலாம்.
வாட்ஸ்-அப்பில் ப்ளூ டிக் மறைப்பது எப்படி?
ப்ளூ டிக்கை மறைக்கும் செயல்முறையும் முன்பு பார்த்தது போலதான். ப்ரைவசி பிரிவில் இந்த அம்சத்தை நீங்கள் காணலாம், ஆனால் நீங்கள் அதை அதே பெயரில் கண்டுபிடிக்க முடியாது. வாட்ஸ்அப் "ரீட் ரெசிப்ட்" (Read Receipt) ஆப்ஷனை வழங்குகிறது, இதனை பயன்படுத்தி ப்ளூ டிக்கை முடக்கலாம். அது குறித்த வழிமுறைகள்:
1: முதலில் வாட்ஸ்அப் செயலிக்குச் சென்று "செட்டிங்ஸ்" பிரிவைத் திறக்கவும்.
2: இப்போது, "அக்கவுண்ட்ஸ்" க்குச் சென்று 'ப்ரைவசி' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
3: "ரீட் ரெசிப்ட்ஸ்" ஆப்ஷனுக்கு கீழே ஸ்க்ரால் செய்து, 'சாட்ஸ்' (Chats) இல் ப்ளூ நிற டிக்ஸை மறைக்க அதை முடக்கவும்.
பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதே செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ஆப்ஷனை மாற்றலாம். குறிப்பிடப்பட்ட ஆப்ஷனை நீங்கள் முடக்கினால், நீங்கள் அனுப்பிய செய்திகளை மற்றவர்கள் படிக்கும்போது ப்ளூ டிக்கை பார்க்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.