மங்காத்தா.. பேரைக் கேட்டாலே அஜித் ரசிகர்கள் சிலிர்த்துக் கொள்வார்கள். அஜித்தை சூப்பர் ஸ்டைலில் காட்டிய படம் அது. அந்தப் படத்துக்குப் பின்னர் தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் தமிழகம் முழுவதுமே பேஷனானது. 


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. அஜித் படங்களில் ஒரு சிறந்த ப்ளாக்பஸ்டர் மூவி என்ற அந்தஸ்தைப் பெற்ற படம். வெங்கட்பிரபு நட்சத்திர நடிகரை இயக்கிய முதல் படம். அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் வந்த முதல் படம். இப்படி பல்வேறு கவன ஈர்ப்புகளைப் பெற்ற ஸ்டார் படம் மங்காத்தா. படத்திற்கு யுவன்சங்கர் ராஜாவின் துள்ளல் இசை பிளஸ். நேற்றுடன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், #10YearsOfMankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.


அஜித் ரசிகர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் எனப் பலரும் மங்காத்தா குறித்து நெகிழ்ச்சியான பல தகவல்களைப் பகிர்ந்திருந்தனர்.


அந்த வரிசையில் படத்திம் ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கரும் தனது கருத்துகளைப் பகிர்ந்தார். ஆனால், அது வெறும் அனுபவப் பகிர்வாக இல்லாமல் மங்காத்தா ரசிகர்களின் 10 ஆண்டுகால கேள்விக்குப் பதிலாக அமைந்தது.




மங்காத்தா படத்தில் அஜித் ஒரு டாலர் செயின் அணிந்திருப்பார். அந்த டாலர் கைதிகளுக்கு அணிவிக்கப்படும் கைவிலங்கு போல் இருக்கும். அந்த டாலரின் பின்னணி பலருக்கும் புரியாமலேயே இருந்தது. இந்நிலையில் வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ஒரு வித்தியாசமான டாலர் ஹீரோவுக்கு வேண்டும் என்று கூறியிருந்தார். படத்தின் க்ளைமாக்ஸில் அந்த டாலருக்கு முக்கியப் பங்குள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித் அந்த டாலரை உருவி நெருப்பில் போட்டுச் செல்வார். படத்தில் அவர் ஓர் அண்டர்கவர் ஆஃபீஸர் என்பதே அப்போதுதான் தெரியும். கதையில் முக்கியத்துவம் பெற்ற அந்த டாலரை முதல் நாள் ஷூட்டிங்கின் போது முதல் காட்சியை எடுக்கும் முன்னர் தான் நாங்கள் உறுதி செய்தோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அஜித் இருவருக்குமே இந்தத் திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷலான படம். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளிவந்தால் அஜித் ரசிகர்கள் இன்னும் குஷியாக விடுவார்கள்.








மங்காத்தா 2 எடுப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியிருக்கும் சூழலில் மங்காத்தாவில் அஜித் அணிந்திருந்த செயினின் பின்னணி குறித்து சுவாரஸ்யத் தகவல் அவரது ரசிகர்களை இன்னும் இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தியிருக்கிறது. அஜித் ரசிகர்கள் #MankathaChain என்றொரு ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.