இன்றைய தொழில்நுட்ப உலகில் மெசெஞ்சர் செயலியான WhatsApp இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த நவீன உலகில் தனி நபர் செய்தி, குடும்ப க்ரூப், அலுவலக க்ரூப் என அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யவும், அரட்டை அடிக்கவும் உகந்த இடமாக மெசேஞ்சர் செயலி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. 


டெலிட் வசதி நேரம் அதிகரிப்பு


அதன் மேம்பட்ட செயல்பாடுகளை குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து புது அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. இதில், தேவையற்ற செய்திகள், தவறுதலாக அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் திறன் பயனர்களின் விருப்பமான அம்சங்களுள் ஒன்று.


நாம் தேவையற்றோ, தவறுதலாகவோ அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு DELETE FOR EVERYONE எனும் இந்த அம்சம் அறிமுகமானது.


 






இந்த அம்சத்தின் மூலம் தனி நபர், குழு என அனைத்திலும் நாம் அனுப்பும் மெசேஜை டெலிட் செய்யலாம், ஒரு தகவலை அனுப்பி 68 மணி நேரத்துக்குள் மெசேஜை அழிக்கலாம். இந்நிலையில், இந்த நேர வரம்பு தற்போது 2 நாள்கள் 12 மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு உபயோகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


முந்தைய அப்டேட்ஸ்


குரல்பதிவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஸ்டேட்டஸ்-ற்கு பெயர் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்' என்று வைத்துள்ளார்கள். மற்றபடி எழுத்து, புகைப்படம், விடியோ ஸ்டேட்டஸ் வைப்பது போலவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனாகவே, நாம் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காட்டுவது போன்ற வசதியுடன் வருகிறது.


மெஸேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும் எல்லா எமோஜிகளை பயன்படுத்தியும் மெஸேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள 6 எமோஜிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் அப்டேட்டும் விரைவில் வெளிவருமென செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வசதி முதலில் ஐஒஎஸ் பயனர்களுக்குதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


நம் அனைவரது மொபைல்களிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மெசெஞ்சர் ஆப் வாட்ஸ் அப் ஆகும். சாட்டிங், மீடியா அனுப்புவது, லேட்டஸ்டாக பணப் பரிமாற்றம் உள்பட பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் ஒரு இன்றியமையாத செயலியாக உள்ளது. டெலிக்ராம், பேஸ்புக் மேசஞ்சர், போன்ற மாற்றுகள் இருந்தாலும், இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் தரும் அனுபவத்தை வேறு யாரும் தரவில்லையோ என்னவோ, வாட்ஸ்அப் கொடி கட்டிப் பறக்கிறது.