தென் தமிழகத்தில் தலைநகரமாக மதுரை திகழ்கிறது. மதுரை வழியாகவே தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன் தகவல்கள் இங்கே.

 


சிறப்பு ரயில்கள்:

 


”ஏப்ரல் 8 முதல் ஜூன் 24 வரை தெலுங்கானா கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (07191) ஏப்ரல் 10 முதல் ஜூன் 26 வரை மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயிலும் (07192), மே 6 முதல் ஜூன் 24 வரை குஜராத் ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (09520),  மே 19 ஜூன் 28 வரை மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயிலும் (09519),

 

வாராந்திர ரயில்கள்:

 

ஏப்ரல் 7 முதல் மே 26 வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலும் (06030), ஏப்ரல் 8 முதல் மே 27 வரை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06029), ஏப்ரல் 11 முதல் மே 30 வரை மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர ரயிலும் (06070), ஏப்ரல் 12 முதல் மே 31 வரை  தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06069), ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை  ஹூப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07355),

 

ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை ஹூப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07356), ஏப்ரல் 1 முதல் மே 27 வரை மைசூர் - மானாமதுரை ரயிலும் (06237), ஏப்ரல் 2 முதல் மே 28 வரை மானாமதுரை - மைசூர் வாராந்திர ரயிலும் (06238), ஏப்ரல் 5 முதல் ஜூன் 28 வரை கச்சக்குடா - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (07435), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை நாகர்கோவில் கச்சக்குடா வாராந்திர ரயிலும் (07436), மே 5 முதல் மே 26 வரை நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர ரயிலும் (06012), மே 6 முதல் மே 27 வரை தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (06011)

வந்தே பாரத் மற்றும் வாரந்திர ரயில்:


மே 2 முதல் ஜூன் 27 வரை சென்னை - நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06067),  நாகர்கோவில் - சென்னை வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06068), மே 3 முதல் ஜூன் 30 வரை சென்னை - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06057), நாகர்கோவில் - சென்னை வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06058), ஜூன் 27 வரை செகந்திராபாத் ராமநாதபுரம் வாராந்திர ரயிலும் (07695), ஜூன் 28 வரை ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர ரயிலும் (07696) இயக்கப்பட்டு வருகின்றன.

 

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்


 

மத்திய பிரதேசம் ஜபல்பூர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஏப்ரல் 18 முதல் ஜூலை 26 வரையும், மதுரை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) ஏப்ரல் 20 முதல் ஜூலை 27 வரையும், திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா வாராந்திர சிறப்பு ரயில் (06045) மே 22 முதல் ஜூன் 12 வரையும், எலகங்கா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23 முதல் ஜூன் 13 வரையும், ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக தாம்பரம் - கொச்சுவேலி வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06035) மே 16 முதல் ஜூன் 29 வரையும், கொச்சுவேலி - தாம்பரம் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06036) மே 17 முதல் ஜூன் 30 வரையும் இயக்கப்பட்டு வருகின்றன” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.