வாட்சப் தனது தனிப்பயனர் அமைப்புகளில் புதிய அப்டேட்களைப் புகுத்த உள்ளது அதன்படி இனி தனிநபர்களிடமிருந்து உங்களது வாட்சப் புகைப்படம் மற்றும் கடைசியாக பார்க்கப்பட்ட நேரம் ஆகியவற்றை மறைக்கலாம்.இதனை தனது மைக்ரோ ப்ளாக்கிங் தளத்தில் வாட்சப் பதிவிட்டுள்ளது.மேலும் நாம் பதிவிடுவது குறித்து கவனத்துடன் இருக்கவும் வாட்சப் அறிவுறுத்தியுள்ளது. 


 






முன்னதாக,


வாட்ஸ் அப்(WhatsApp) குழு வாய்ஸ் காலில் மியூட் (Mute) செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது சில அப்டேட்களை அளித்து வரும் நிலையில் பயனாளர்களின் வசதிக்கேற்ப எதிர்கால அப்டேட்டுகளையும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் ஒலி இல்லாமல் செய்வது, செய்திகளுக்கு ரியாக்ட் செய்வது, ஸ்டிக்கர்ஸ், கைரேகை என பல அப்டேட்டுகளை கடந்த காலங்களில் வழங்கியிருந்தது. 


 


தற்போது, வாட்ஸப் குழு காலிங் வசதியில் தனிப்பட்ட ஒருவருக்கு மெசேஜ் செய்யவும், அவர்களை மியூட் செய்யவும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் யார் பேசுகிறார்கள் என்ற நோட்டிஃபிகேசன் வசதியினையும் வழங்கியிருக்கிறது. மேலும், இந்த புதிய வசதியில் வாட்ஸ் அப் குழுவில் கால் செய்தவர் மட்டுமே மற்றவரை மியூட் செய்யும் முடியும் என்பதில்லை. ஒரு குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும் மற்றவர்களை மியூட் செய்யலாம்.


அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப்களில் அட்மின்களின் அனுமதி இல்லாமல் லிங்க் மூலமாக இணையும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது பல அந்நிய நபர்களால் தவறான தகவல் அனுப்பப்படுவதோடு சமூக பிரச்சினைக்கும் வழி வகுப்பதாக கருதப்பட்டது. இப்பிரச்சினையை களைய நிர்வாக ஒப்புதல் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி குரூப்பில் இணைய அட்மின்களின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அட்மின்களால் குரூப்களில் சேர விரும்புபவர்களின் கோரிக்கைகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். 


மேலும், வாட்ஸ் அப் கம்யூனிகேசன் தொடர்பாக பல்வேறு புதிய அட்டேட்களை வழங்க திட்டமிட்டு வருவதாகவும், அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.