WhatsApp Update: போட்டோவும், வீடியோவும் இனி பெரிய சைஸ்.. வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

சேட் செய்யும் போது அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோக்களை சற்று பெரிய அளவாக காட்டும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது

Continues below advertisement

உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல்பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலெயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன. 

Continues below advertisement


அதிகமான போலிச்செய்திகள் பரவுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து ஃபார்வேர்ட் செய்யும் முறைகளில் பல அப்டேட்களை வாட்ஸ் அப் கொண்டு வந்தது. இப்படியாக கொண்டு வரப்படும் அப்டேட்கள் உடனடியாக அனைவரும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் வரவேற்பை பொருத்தே அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வரும். சின்ன சின்ன அப்டேட்கள் நேரடியாகவும் கொண்டுவரப்படுகின்றன. அப்படியான ஒரு அப்டேட்டை தற்போது கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப்


நாம் மற்றவர்களுடன் சேட் செய்யும் போது அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோக்களை சற்று பெரிய அளவாக காட்டும் புதிய அப்டேட்டைத்தான் தற்போது வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.இந்த அப்டேட் iOS பயனாளர்களுக்கு கடந்த மாதமே கொண்டுவரப்பட்டது.  இப்போது அனைத்து பயனாளர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள வாட்ஸ் அப், இப்போது வாட்ஸ் அப்பில் போட்டோ மற்றும் வீடியோ பெரியதாக இருக்கும். யாருமே உங்களது புகைப்படத்தை பார்க்காமல் கடந்து போக முடியாது. இது புன்னகை ஏற்படுத்த சிறந்த காரணம் என குறிப்பிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்து லேட்டஸ்ட் வெர்ஷனை பெற்றால் இந்த அப்டேட் வரும் என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் போட்டோ மற்றும் வீடியோ பகிர்வது அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்த அப்டேட் பெரியஅளவில் வசதியாக இருக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் இந்த அப்டேட் வசதியை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் யூசர்கள் இந்த பயன்பாட்டில் மகிழ்ந்திருக்கும் நிலையில் ,இனி ஆண்ட்ராய்டு யூசர்களும் இந்த வசதியை பெற்று மகிழலாம்.

இதற்கிடையே மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் இணைந்து mygov charbot  என்ற  சேவையை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில்  தடுப்பூசி மையங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியையும் வாட்ஸ் அப் இணைத்துள்ளது.

> கொரோனாவுக்கான வாட்சப் ’சாட்பாட்’ பயன்படுத்துவது எப்படி?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola