கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் செயலி,  தற்போது தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியா தொழில்நுட்பமாக மாறியுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்-அப் செயலி, பயனாளர்கள் வேறு செயலிகளுக்கு மாறுவதை தவிர்க்க, அவர்களை ஈர்க்க அடுத்தடுத்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. குறிப்பாகம் வாட்ஸ்-அப் செயலி மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு,  பயனர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து அவ்வப்போது  வழங்கப்படும் அப்டேட்கள் வாட்ஸ்-அப் செயலியின் அபரிவிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Continues below advertisement

வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:

அந்த வரிசையில், புதியதாக வாட்ஸ்-அப் செயலி வாயிலாக வரும் அழைப்புகள் தொடர்பான நோட்டிபிகேஷன்களை முடக்கும் புதிய வசதி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவித தொந்தரவுமின்றி பயனாளர்கள், செல்போனில் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய வசதியை செயல்படுத்த, செட்டிங்ஸ் ஆப்ஷனில் நோடிபிகேஷன்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். தொடர்ந்து, அங்குள்ள டாகுள் பட்டனை அழுத்துவதன் மூலம் Disable Notifications for Calls feature எனும் ஆப்ஷனை செயல்படுத்த முடியும். இதன் மூலம், வாட்ஸ்-அப் செயலி மூலம் வரும் அழைப்புகளுக்கான நோடிபிகேஷன்களை தடுக்க முடியும்.

Continues below advertisement

நோக்கம் என்ன?

அதிக அளவு அழைப்புகளைப் பெறுபவர்கள், குறுக்கீடு இல்லாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்த விரும்புவோருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியாமான மீட்டிங்கில் இருப்பவர்களுக்கும் அல்லது வேறு சில செயல்களில் ஈடுபடுபவர்களும், வட்ஸ்-அப் செயலி அழைப்புகளால் ஏற்படும் தொந்தரவை விரும்பாதவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

தவறாக டெலிட் செய்துவிட்டீர்களா?

எதிர்பாராத விதமாக தனிநபர் அல்லது குழுவில் தவறுதலாக குறுஞ்செய்தியை அனுப்பினால்,  delete for everyone ஆப்ஷன் மூலம் அந்த குறுஞ்செய்தியை அகற்ற முடியும். ஆனால், அவசர கதியில் தவறுதலாக delete for me  எனும் ஆப்ஷனை தொட்டு விடுவது என்பது அனைத்து பயனாளர்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையாக தான் உள்ளது. இந்நிலையில், தவறுதலாக delete for me  எனும் ஆப்ஷனை பயனாளர் தேர்வு செய்துவிட்டால், உடனடியாக undo  செய்ய பயனாளர்களுக்கு 5 விநாடிகள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை நீக்க, delete for everyone எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய பயனாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். 'Accidental Delete' எனப்படும் இந்த புதிய வசதி தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது.

அண்மையில் வெளியான புதிய அப்டேட்கள்:

முன்னதாக, வாட்ஸ்-அப் செயலியில் ஏற்கனவே பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோவை எதிர்தரப்பில் இருப்பவர், ஒருமுறை பார்த்ததும் தானாகவே அழிந்து விடும் வகையிலான வசதி பயன்பாட்டில் உள்ளது. அதைதொடர்ந்து தற்போது, பயனர் அனுப்பும் குறுஞ்செய்தியை, எதிர்தரப்பில் இருப்பவர் ஒருமுறை பார்த்ததும் தாமாகாவே அழிந்து போகும் வகையிலான, view-once text messages எனும் புதிய வசதி சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.