கோடிக்கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். சமீப நாட்களாக வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் பயனாளர்களின் வரவேற்பையும் பெற்று வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ் அப் குறித்த அப்டேட்டுகளை வழங்கும் WaBetaInfo என்னும் ட்விட்டர் பக்கத்தில் , தற்போது வாட்ஸ்அப் ஸ்கீன் ஷார்ட் எடுக்கும் வசதியை பிளாக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் View Once வசதியை அறிமுகப்படுத்தியது. ஸ்னாப் சாட்டில் இருப்பது போல இந்த வசதி மூலம் அனுப்பப்படும் புகைப்படம் , வீடியோ அல்லது வேறு எந்தவொரு மீடியாவாக இருந்தாலும் , அதனை யாருக்கு அனுப்புகிறோமோ அவர்கள் பார்த்தவுடன் அது தானாகவே மறைந்துவிடும் . இது பலரின் வரவேற்பை பெற்ற நிலையில் இதில் இருக்கும் குறைகள் குறித்து வாட்ஸ் அப் டெவலப்பர்களுக்கு வந்த புகாரை அடுத்து அதில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப் .
அதாவது View Once மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் . ஆனால் அதனை சேமிக்கவோ , மற்றவர்களுக்கு அனுப்பவோ முடியாது. View Once மூலம் ஸ்கிரீன் ஷார் எடுக்க முடியும் என்றாலே அந்த வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதில் எந்த பயனும் இல்லை என வாட்ஸப்பிற்கு வந்த புகாரை அடுத்து, டெவலப்பர்ஸ் குழு , View Once மூலம் அனுப்பப்படும் செய்திகளை ஸ்கிரீன் ஷார்ட் எடுக்க முடியாமல் பிளாக் செய்யும் வசதிகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை தற்போது பயன்படுத்தி பார்க்கலாம். இந்த வசதியை குரூப் அட்மின் மட்டும் பயன்படுத்தமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்கீரீன்ஷாட் எடுத்தாலோ , அல்லது வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்தாலோ அவை கறுப்பு நிற பக்கங்களாகவே தோன்றுமே தவிர அவற்றை ஸ்கீன் ஷார்ட் அல்லது ரெக்கார்ட் செய்ய முடியாது. WaBetaInfo அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு 2.22.21.16 என்னும் வெர்சனில் இது கிடைக்கும். ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் பீட்டா வெர்சனை பயன்படுத்துபவர்களாக இருந்தால் , அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.