Whatsapp: இனி எதுக்கு காத்திருக்கணும்? iOS டூ ஆண்ட்ராய்ட்.. வாட்சப்பில் வருது புது அப்டேட்!

ஐபோன் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அப்டேட்டை வாட்ஸப் கொண்டு வரவுள்ளது.

Continues below advertisement

உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலேயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன. 

Continues below advertisement

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் ஐபோன் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அப்டேட்டை வாட்ஸப் கொண்டு வரவுள்ளது. ஐபோன் வைத்திருக்கும் நீங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆண்ட்ராய்ட் மாறினால் உங்களது வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் எடுக்க முடியுமா என்றால், இப்போது முடியாது தான். ஆனால் வரப்போகும் அப்டேட் மூலம் இனி ஐபோனில் இருந்து மெசேஜ்களை ஆண்ட்ராய்ட்க்கு மாற்றிக்கொள்ளலாம். 


இது தொடர்பான தகவலை WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அங்கு பதிவிடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில் அதற்கான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்வது மூலம் ஆண்ட்ராய்டுக்கு உங்கள் மெசேஜ்களை மாற்றிக்கொள்ளலாம். இது குறித்து தெரிவித்துள்ள WABetaInfo, இந்த அப்டேட் இப்போதுதான் தயாராகி வருகிறது. விரைவில் வரும் அப்டேட்டில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஐஓஎஸ் குரூப் கால் வசதியில் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்தது வாட்ஸ் அப்.  2.21.140.11 வெர்ஷனில் பீட்டா அப்டேட்டாக இந்த குரூப் கால் அப்டேட் வந்தது. ஒரு வெயிட்டிங் கால் ஆப்ஷனைப் போலவே இது கொடுக்கப்பட்டது. யாராவது உங்களுக்கு குரூப் கால் அழைப்பு கொடுத்தால் உங்களது ஸ்கிரீனில் அது தெரியும். ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ரிங் பட்டனும் உள்ளது. குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் வீடியோ காலை தவிர்க்க ‘ignore’ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola