பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். இந்நிலையில் வாட்ஸ் அப் ஆன்லைனில் அப்டேட்டை பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம். 


 online


தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும்.  இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ  அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டை தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்துவிட்டது வாட்ஸ் அப். Last seen போலவே online என்பதையும் நாம் நிர்வகிக்க முடியும். Settings சென்று "Account" ஐ க்ளிக் செய்து "Privacy"ஐ ஓபன் செய்தால் "Last seen and online" என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்து “same as last seen” ஐ க்ளிக் செய்தால் இந்த வசதியை பெறலாம்.  2.22.20.7 வெர்ஷன் பீட்டா பயனர்களுக்கு தற்போது இந்த அப்டேட் வந்துள்ளது. விரைவில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த வசதி வரும். பின்னர் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியை வாட்ஸ் அப் கொண்டு வரும்.




ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்:


மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், ப்ரீமியம் சப்ஸ்கிருப்சனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த வசதியானது வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த அப்டேடானது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும், அது தொடர்பான வேலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அப்டேட் சிறப்பம்சங்கள்:


இந்த புதிய அப்டேட்டில் பயனர்கள், வாட்சப் கணக்கை 10 சாதனங்கள் வரை கூடுதலாக இணைக்கும் திறன் போன்ற கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.இதன் மூலம் வாட்சப் கணக்கை மொபைல் லேப்டாப் உள்ளிட்ட 10 சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடிய வசதி கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சில சேட்களை சில சாதனங்களுக்கு என ஒதுக்கி கொள்ளலாம். இதன் மூலம், குறிப்பிட்ட சாதனங்களை வணிகத்திற்கு என ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது வணிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வசதியானது கூடிய விரைவில் வரும் என்றும், ப்ரீமியம் சப்கிரிப்சனுக்கு கூடுதலாக தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் உள்ளிட்ட பிற தகவல்கள் பின்னர் தெரிய வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது